ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஊர்வலங்கள் நடத்த தடை
சென்னை: ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துவிட்டதால் அமைச்சர்கள் அரசு வாகனங்களைப் பயன்படுத்தவும், அரசு விடுதிகளில் தங்கிக் கொள்ளவும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பான தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் தளர்த்தி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் கமிஷன் செயலாள ஆர்.கே.ஸ்ரீவத்சவா தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் கீழ்க்கண்டவற்றை தளர்த்தி உத்தரவிடப்படுகிறது.
1. ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட பணிகளுக்கு டெண்டர் விடலாம். இருந்தாலும், அதற்கு தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற வேண்டும்.
2. ஏற்கனவே பணி ஆணை வழங்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பணிகளை தொடங்கலாம்.
3. உள்ளாட்சி அமைப்புகள், கூட்டம் நடத்தி முடிவுகள் எடுக்கலாம்.
4. அமைச்சர்கள் அரசு வாகனங்களை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது. உள்ளூர் சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அரசு வாகனங்களில் தேசிய கொடி மற்றும் சுழல் விளக்குகளை பயன்படுத்தலாம். ஆனால், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அமைச்சருக்கான அதிகாரத்துடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை. அந்த இடத்தில் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அமைச்சர்களும் அந்த எல்லையை தாண்டி வாகனங்களில் செல்லக்கூடாது.
5. மாநில அமைச்சர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் அரசு செயலாளர்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளலாம். தேர்தல் கமிஷன் முன்அனுமதி இல்லாமல், மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி, கோட்டாட்சியர், தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தக்கூடாது. அந்த அதிகாரிகளும் தேர்தல் கமிஷன் முன் அனுமதியில்லாமல் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது. அமைச்சர்களுக்கான பாதுகாப்பு தொடரும். ஆனால், மரபு கட்டுப்பாடு முன்புபோல நீடிக்கும்.
6. ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் எந்த வித ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை. தற்போதைய விதிமுறைகளின்படி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் முறைப்படுத்தப்படும்.
7. தேர்தல் பார்வையாளர்களுக்கு மே 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை அரசு விருந்தினர் இல்லங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதால், அந்த நாட்கள் தவிர மற்ற நாட்களில் விருந்தினர் இல்லங்களை அமைச்சர்கள் அரசுப் பணிக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
8. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் புதிய பணிகளை மேற்கொள்ளலாம்.
9. எம்.பிக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தலாம். ஆனால், எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தக்கூடாது.
10. அரசுப் பணிகள், ஆய்வுகள் தொடர்பான பயணம் மேற்கொள்ளும்போது அரசுக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகைகளில் அமைச்சர்கள் தங்கிக் கொள்ளலாம். வாக்கு எண்ணும் நாளுக்கு முந்தைய நாள்களில் இருந்து அதாவது மே 11ம் தேதிமுதல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மே 15ம் தேதி வரை விருந்தினர் இல்லங்களில் தங்க அமைச்சர்களுக்கு அனுமதி இல்லை. தேர்தல் பார்வையாளர்களுக்காக அந்த இல்லங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவைதவிர, தேர்தல் நடைமுறைகள் முடிவடையும் வரை, மற்றவற்றிற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.
-
மாநிலங்களை தங்களுக்கு கீழாக மத்திய அரசு கருதக்கூடாது! உச்சநீதிமன்ற நீதிபதி மிக தெளிவாக சொன்ன கருத்து -
இமெயில் ஐடி தராவிட்டால்... வேட்பாளருக்கு பெரிய சிக்கல்.. தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications