ராஜ்தானி எக்பிரஸில் தீ: 4 பெட்டிகள் சாம்பல்-பயணிகள் தப்பினர்
ரத்லாம்: மும்பையில் இருந்து டெல்லி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் ரயிலின் 4 பெட்டிகள் சேதமடைந்தன. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மும்பையில் இருந்து டெல்லி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 2.20 மணியளவில் மத்தியபிரதேசத்தில் உள்ள ரத்லாம் மாவட்டத்தில் சென்று கொண்டிருக்கையில் பி-6 மற்றும் பி-7 ஆகிய பெட்டிகளில் திடீர் என்று தீ பிடித்தது. இது அருகில் இருந்த பி-5 மற்றும் சமையல் அறை பெட்டிக்கும் பரவியது. ரயில் தீப்பிடித்து எரிவதைப் பார்த்த பயணிகள் அலறினர். இதை கேட்டவுடன் ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். ரத்லாம் மற்றும் உஜ்ஜெயினி ஆகிய நகரங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் ரயிலில் இருந்த ஆயிரத்து 100 பயணிகள் எந்தவித காயமும் இன்றி தப்பினார்கள். பி-6, பி-7 ஆகிய பெட்டிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. மற்ற இரு பெட்டிகளும் சேதம் அடைந்தன. இந்த விபத்தால் அந்த பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேதமடைந்த 4 பெட்டிகளையும் கழற்றிவி்ட்டு அந்த ரயில் காலை 8.20 மணி அளவில் டெல்லி புறப்பட்டது. அந்த 4 பெட்டிகளில் இருந்த 144 பயணிகளுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று மேற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இரு பெட்டிகளில் ஏற்பட்ட மின் இணைப்பு கோளாறு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்காலம் என்று கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications