ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 14... எஸ்எஸ்எல்சி மே 25!

தமிழகம் முழுவதும் விடைத்தாள் திருத்தும் பணி இன்று முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து மே 14-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகளும், மே 25-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு, கடந்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி தொடங்கியது.
இந்த தேர்வை 1,890 மையங்களில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 205 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். அவர்களில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 102 பேர் மாணவிகள். தனித் தேர்வர்கள் 57 ஆயிரத்து 56 பேர் ஆவார்கள். தேர்வு மார்ச் 25-ந் தேதி முடிவடைந்தது.
இந்த விடைத்தாள்கள் தமிழ்நாட்டில் 43 மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் மாதம் 23-ந் தேதி தொடங்கியது. இந்த இரு பாடங்களின் மதிப்பீட்டில் மட்டும், மாணவர்களின் பதிவு நம்பர் அப்படியே இருக்கும்.
ஆனால் மற்ற பாடங்களின் மதிப்பெண்கள் தொழிற்கல்வியில் சேருவதற்கு மிகவும் முக்கியம் என்பதால் மாற்று (டம்மி) நம்பர் கொடுத்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. அதன்படி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் முதலிய பாடத்திற்குரிய விடைத்தாள்கள் திருத்தும் பணி மார்ச் மாதம் 28-ந் தேதி தொடங்கி முடிவடைந்துவிட்டது.
தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. அடுத்த கட்டமாக மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் வேலை துவங்குகிறது.
மே 14-ந் தேதி வெளியீடு
7.75 லட்சம் மாணவ-மாணவிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மே மாதம் 14-ந் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
எஸ்எஸ்எல்சி
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை 6,520 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 56 ஆயிரத்து 956 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
8.5 லட்சம் மாணவ-மாணவிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே மாதம் 25-ந் தேதி வெளியிட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications