சோனியா-கருணாநிதி பிரசார செலவு: திமுக-காங். வேட்பாளர்கள் கணக்கில் சேர்ப்பு

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.16 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருந்தது.
வங்கி கணக்கு மூலமே இதை செலவு செய்ய வேண்டும் என்றும் வேட்பாளருக்காக பிரசாரம் செய்ய ஹெலிகாப்டர்களில் வந்து செல்லும் தலைவர்களின் செலவுக் கணக்கும் அந்த வேட்பாளர் கணக்கிலேயே சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
செலவு விவரங்களை தனியாக ஒரு புத்தகத்தில் எழுதி வைத்து தேர்தல் கமிஷனிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் சார்பிலும், வேட்பாளர்களின் செலவு கணக்கு கண்காணிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இதில் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களுக்கு ரூ.4 லட்சம் முதல் 7 லட்சம் வரை செலவு ஆனதாக கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அதே போல தேர்தல் கமிஷனும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கான செலவை தனியாக எழுதி வைத்திருந்தது. சில வேட்பாளர்கள் தாக்கல் செய்த செலவு கணக்குக்கும், தேர்தல் கமிஷன் எழுதிய கணக்குக்கும் வேறுபாடு இருந்தது.
சில வேட்பாளர்களிடம் இதை சுட்டிக் காட்டியபோது அதை தங்கள் கணக்கில் சேர்த்துக் கொண்டனர். ஆனால், தேர்தல் கமிஷன் கூறிய செலவு கணக்கை ஏற்காத வேட்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கான செலவு, தொண்டர்களுக்கு உணவு வழங்கிய செலவு, பொதுக் கூட்ட செலவு, ஒலி பெருக்கி ஆகியவற்றுக்கான செலவு உள்பட பல்வேறு செலவுகளை தேர்தல் கமிஷன் வேட்பாளர்கள் செலவில் சேர்த்துள்ளது.
சென்னையில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லியிலிருந்து தனி விமானத்தில் வந்து பங்கேற்ற பிரசாரக் கூட்டம் தீவுத்திடலில் நடந்தது. இதற்கான செலவை இதில் பங்கேற்ற திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் செலவு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் தலா ரூ.70,000 இந்த கூட்டத்தின் செலவாக சேர்க்கப்பட்டுள்ளது.
அதே போல முதல்வர் கருணாநிதி, அயனாவரம், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய இடங்களில் பங்கேற்ற பொதுக்கூட்ட செலவு இந்தக் கூட்டங்களில் பங்கேற்ற வேட்பாளர்கள் செலவுக் கணக்கில் தலா ரூ.30,000 வீதம் சேர்க்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா செய்த தேர்தல் பிரசார செலவு அந்த கூட்டணி கட்சி வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications