எம்எம்சி, ஸ்டான்லியில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு 200 கூடுதல் இடங்கள்
சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு அரசு கல்லூரிகளில் 200 இடங்கள் அதிகரிக்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான கவுன்சிலிங் ஆண்டுதோறும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் நடக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஆயிரத்து 945 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் போகும் 292 இடங்கள் தவிர ஆயிரத்து 670 இடங்கள் உள்ளன. மாநிலத்தில் உள்ள 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கு 674 இடங்கள் கிடைக்கும்.
இந்த வருடம் அரசு மருத்துவக் கல்லூரிகளான எம்.எம்.சி. என்று அழைக்கப்படும் சென்னை மருத்துவக் கல்லூரியிலும், சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியிலும் தலா 150 இடங்கள் உள்ளன.
இந்த இரண்டு கல்லூரிகளிலும் உள்ள இடங்களை தலா 250-க உயர்த்த விரும்பிய தமிழக அரசு அதற்கான அனுமதி கேட்டு
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு விண்ணப்பித்தது.
இதையடுத்து இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளிலும் போதிய கட்டமைப்பு வசதி உள்ளதா, நோயாளிகள் எத்தனைபேர் வருகிறார்கள், மாணவர்கள் படிக்க போதிய வசதிகள் உள்ளதா என்று அறிய மருத்துவக்குழுவினர் வந்து ஆய்வு செய்துள்ளனர்.
இன்னும் 20 நாட்களுக்குள் இந்த 2 கல்லூரிகளிலும் மாணவர்சேர்க்கையை அதிகரித்து அதற்கான அனுமதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அனுமதி கிடைத்தால் கூடுதலாக 200 இடம் கிடைக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications