மலிவு கட்டண சிகிச்சைக்காக இந்தியா போகாதீர்கள்! - அமெரிக்கர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்
வாஷிங்டன்: குறைந்த செலவில் சிகிச்சைப் பெறும் நோக்கில் அமெரிக்கர்கள் இந்தியாவுக்குச் செல்ல வேண்டாம், என அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துவிட்டது.
இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் மிகவும் அதிகமாகும். இதனால் அமெரிக்கர்கள் மருத்துவ சிகிச்சை குறைவாக உள்ள இந்தியா மற்றும் மெக்ஸிகோவுக்குச் சென்று சிகிச்சை பெறுகின்றனர்.
இது அமெரிக்காவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஒபாமா, "அமெரிக்காவிலேயே தரமான சிகிச்சை வசதிகளை குறைந்த செலவில் ஏற்படுத்தித் தர திட்டமிட்டுள்ளோம்.
குடிமக்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் அளிக்க வேண்டும் என்பதற்காக அரசு திட்டமிடும்போது, மக்கள் இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகளுக்கு சிகிச்சைக்காக செல்வது வேதனையளிக்கிறது. இது தொடர்பாக கலந்துபேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.
உள்நாட்டிலேயே உயர்தர சிகிச்சை பெறுவது மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
மருத்துவ கவனிப்பு என்பது ஆரம்பம் முதலே தொடங்கப்பட வேண்டும். இது எவ்விதம் செயல்படுகிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து அதில் உள்ள கோளாறுகள் சரி செய்யப்படும். இங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும், அனைத்து டாக்டர்களும் மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கின்றன. இருப்பினும் மருத்துவ செலவு அதிகரிப்பது குறித்து கவனத்தில் கொண்டு அதை சரி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். மருந்து, மாத்திரைகளின் விலையும் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
இதன் மூலம் நீங்கள் அளிக்கும் பணத்துக்கு உரிய மருந்துகளை வாங்கியுள்ளீர்கள் என்பதை உணரலாம். ஆனால் இந்தியா, கனடா மற்றும் மெக்ஸிகோவில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதல் தொகை செலவிட வேண்டியிருக்கும்.
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் விலை பிற நாடுகளைவிட இங்கு அதிக விலைக்கு விற்பனையாவது ஏன் என்பது புரியவில்லை. இதற்கு இங்குள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்தான் காரணம். வெளிநாடுகளில் இதுபோன்ற நிலை கிடையாது. இதற்கு இங்குள்ள வரி விதிப்பு காரணமா அல்லது இதனால் அரசின் வரி வருவாய் குறையுமா என்பதை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் ஒபாமா.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications