மோடி அரசுக்குப் பின்னடைவு...குஜராத் தலைநகர் தேர்தலில் காங் வெற்றி!!

இது வளர்ச்சிக்கான முதல்வர் என்று அன்னா ஹஸாரே போன்றவர்களால் பாராட்டப்பட்டு வரும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்குக் கிடைத்த முதல் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது குஜராத் மாநிலம். 1995க்குப் பிறகு பாஜக ஆதிக்கத்துக்குப் போனது இந்த மாநிலம். இன்றுவரை அங்கு காங்கிரஸ் தலையெடுக்க முடியவில்லை. குறிப்பாக நரேந்திர மோடி முதல்வரான பிறகு, காங்கிரஸ் அங்கு இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டது.
இந்த நிலையில் குஜராத் மாநில தலைநகரான காந்தி நகர் முனிசிபாலிட்டிக்கு முதல் முறையாக நேற்று தேர்தல் நடந்தது.
மொத்தம் 33 சீட்கள் (11 வார்டுகள்- ஒரு வார்டுக்கு 3 சீட்கள்) கொண்ட இந்த நகராட்சியின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 18 இடங்களை வென்று நகராட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. பாஜகவுக்கு 15 இடங்கள் கிடைத்தன.
5 வார்டுகளில் காங்கிரஸ் மொத்த சீட்களையும் வென்றது. 7வது வார்டில் 2 சீட்களையும், 9வது வார்டில் 1 சீட்டையும் வென்றது காங்கிரஸ்.
குஜராத் காங்கிரஸ் தலைவராக முதல் முறை பொறுப்பேற்ற அர்ஜூன் மோத்வாடியாவுக்கு இது மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. காந்தி நகரின் பாஜக தலைவராக இருந்த பிரவீண் பட்டேல், தனக்கு எம்பி சீட் கிடைக்காத கோபத்தில் காந்தி நகரைக் கோட்டை விட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் நரேந்திர மோடி சூரத்தில் இருந்தார். அவர் இதுவரை கருத்து எதுவும் சொல்லவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications