டைம் 100 பட்டியல்: ஒபாமாவை விட செல்வாக்கு மிக்க டோணி!!

உலகின் பிரபலமான 100 பேர் பட்டியலை 'டைம்' வார இதழ் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி உள்பட 5 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
டோணி தலைமையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உலக கோப்பையை பெற்றதையடுத்து அவருக்கு இந்தப் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. 100 பேர் லிஸ்டில் அவர் 52வது இடத்தில் உள்ளார். உலக வல்லரசான அமெரிக்காவின் அதிபர் ஒபாமாவுக்கு இந்தப் பட்டியலில் கிடைத்துள்ள இடம் 86. அவருக்குக் கீழ் பணிபுரியும் ஹிலாரி கிளிண்டனுக்கு 43வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற இந்தியர்களான தொழில் அதிபர் முகேஷ் அம்பானி 61 வது இடத்திலும், நரம்பியல் துறையில் புதிய சாதனை நிகழ்த்திய வி.எஸ். ராமசந்திரன் 79வது இடத்திலும் உள்ளனர்.
ஐடி மற்றும் வர்த்தகத்தில் புதிய உத்திகளுக்காக அஜிம் பிரேம்ஜி, எழுத்தாற்றல் மூலமாக ஊழலுக்கு எதிரான புரட்சியை ஏற்படுத்திய அருணா ராய் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே 9 வது இடத்திலும், பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் அகமது ஷுஜா பாஷா 17 வது இடத்திலும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பர்க் 6 வது இடத்திலும் உள்ளனர்.
முதல் இடம் 30 வயதே நிரம்பிய வேல் கோனிமுக்கு கிடைத்துள்ளது. இவர்தான் எகிப்திய புரட்சியின் செய்தித் தொடர்பாளர் என்பதால் இந்த பெருமை.
25 பேருடன் இவர் ஆரம்பித்த பரப்புரையின் விளைவுதான் பின்னர் 1.20 கோடி மக்கள் இயக்கமாக மாறி, ஹோஸ்னி முபாரக்கை பதவி விலகச் செய்தது. கூகுளில் பணியாற்றும் ஒரு இளம் அதிகாரி கோனிம்.
இரண்டாம் இடம், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸுக்கு கிடைத்துள்ளது.
மூன்றாவது இடம் பெற்றிருப்பவர் பொழுதுபோக்குத் துறையில் பெரும் சாதனைகள் படைத்த நெட்பிலிக்ஸ் நிறுவன சிஇஓ ரீட் ஹேஸ்டிங்ஸ்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications