கேட் பிடிக்கும், கமிலா பிடிக்காது - இங்கிலாந்து மக்கள் கருத்து

விரைவில் இளவரசர் வில்லியமை மணக்கவிருக்கும் கேட், மறைந்த இளவரசி டயானாவைப் போலவே இங்கிலாந்து மக்களிடையே பிரபலமாக இருக்கிறார் என்று இன்று வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள 2 ஆயிரத்து 500 பேரிடம் ராஜ குடும்பத்தினர் பற்றி கருத்து கேட்கப்பட்டது. இதில் டயானாவும் கேட்டும் சமமான வாக்குகளைப் பெற்றனர்.
இங்கிலாந்து ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் 81 சதவீதத்துடனும், அவரது பாட்டி மகாராணி எலிசபெத் 80 சதவீதத்துடனும் மக்களிடையே அதிக பிரபலமாக உள்ளனர்.
இளவரசர் ஹாரிக்கு 70 சதவீத வாக்குகள் கிடைத்தன.
இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற பாதிப்பேருக்கு இளவரசர் சார்லஸ் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. மேலும், அவரது இரண்டாவது மனைவி கமிலாவைப் பிடிக்காது என தெரிவித்துள்ளனர்.
கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 10-ல் 8 பேர் ராஜ திருமண ஏற்பாடுகளை கவனித்து வருவதாகவும், டயானாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை கேட்டிற்கு வில்லியம் அணிவித்தது மிகச் சரியே என்றும் தெரிவித்தனர்.
திருமணத்திற்கு பிறகு கேட் வேலைக்கு போகலாமா என்று கேட்டதற்கு 52 சதவீத இங்கிலாந்து மக்கள் தாரலமாகப் போகலாம் என்றனர். ஆனால் அமெரிக்கர்களோ கேட் வேலைக்குப் போகாமல், ராஜ கடமைகளை மட்டும் செய்யட்டும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications