தமிழக போலீஸ் எதிர்ப்பால் மீண்டும் சிறைக்குப் போன வீரப்பன் மனைவி முத்துலட்சுமி!
மேட்டூர்: கர்நாடக நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 1993 ம் ஆண்டு 6 போலீஸ்காரர்களை சந்தன கடத்தல் வீரப்பனும் , அவரது மனைவி முத்துலட்சுமியும் சுட்டுகொன்றதாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால், முத்துலட்சுமியை சாம்ராஜ்நகர் போலீசார் கடந்த 2008-ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முத்துலட்சுமி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் நீதிமன்றத்தில் முறையிட்டு இருந்தார்.
இதனால், முத்துலட்சுமியை சாம்ராஜ் நகர் கிளைச் சிறையிலிருந்து பெங்களூர் மத்திய சிறைக்கு கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு மாற்றினர்.
இந்த நிலையில், அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் கடந்த புதன் கிழமை சாம்ராஜ்நகர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
இந்த நிலையில், வழக்கில் இருந்து முத்துலட்சுமி விடுதலை செய்யப்பட்டாலும், சிறையில் இருந்து அவரை போலீசார் விடுதலை செய்யவில்லை.
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட வழக்கில் முத்துலட்சுமியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு கோபி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு விசாரணை முடிவடையாததால், முத்துலட்சுமியை சிறையில் இருந்து விடுவிக்க தமிழக போலீசார் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர்.
இதனால், முத்துலட்சுமியை கர்நாடக சிறை அதிகாரிகள் விடுதலை செய்யாமல், சிறையிலேயே அடைத்து வைத்துள்ளனர்.
முத்துலட்சுமி விடுதலையான செய்தி தெரிந்து அவரது இரு மகள்களும், உறவினர்களும் பெங்களூர் மத்திய சிறை முன்பு காத்து இருந்தனர். ஆனால், முத்துலட்சுமி விடுதலையாகி வெளியே வராததால் அவர்கள் ஏமாற்றத்துடன் தங்களது ஊருக்கு திரும்பிச் சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications