2ம் கட்ட தேர்தல்: மேற்கு வங்கத்தில் 85% வாக்குப் பதிவு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று 50 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 85.32 சதவீத வாக்குகள் பதிவாகின.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளில் கடந்த 18ம் தேதி முதற்கட்டமாக 54 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிர்பும், நாடியா, முர்ஷிதாபாத் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு உள்பட்ட 50 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 85.32 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலையொட்டி மொத்தமுள்ள 11,531 வாக்குப்பதிவு மையங்களில் ஏராளமான மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications