பினாயக் சென்னுக்கு தென் கொரியாவின் மிக உயரிய மனித உரிமை விருது!

சட்டீஸ்கரில் ஒடுக்கப்பட்ட பழங்குடி இன மக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வந்த சென், அவர்களது உரிமைகளுக்காகவும் போராடி வந்தார். மேலும் நக்ஸலைட்டுகளை ஒடுக்குவதற்காக அந்த மாநில அரசே உருவாக்கி, ஆதரவு தந்து, நடத்தி வந்த 'சல்வா ஜூதும்' என்ற வன்முறை இயக்கம் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான மனித உரிமை மீறல்களையும் எதிர்த்து வந்தார்.
இதையடுத்து அவர் நக்ஸலைட்டுகளுக்கு உதவியதாக அந்த மாநில அரசால் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் நக்ஸல்கள் குறித்த புத்தகங்கள் இருந்ததாக அந்த மாநில அரசு குற்றம் சாட்டியது.
இதை எதிர்த்து பினாயக் சென் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், ஒருவர் தனது வீட்டில் மகாத்மா காந்தி புத்தகம் வைத்திருந்தால், அவர் காந்தியவாதியா என்று கேள்வி கேட்டு மாநில அரசை கண்டித்தது. நக்ஸல் புத்தகம் வைத்திருப்பது எப்படி நகஸல்களுக்கு உதவியதாகும் என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் அவரை விடுவித்தது.
இதையடுத்து கடந்த திங்கள்கிழமை அவர் ஜாமீனில் விடுதலையானர். இந்நிலையில் 2011ம் ஆண்டின் மனித உரிமைக்கான 'குவாங்ஜூ' விருதை விநாயக் சென்னுக்கு வழங்குவதாக தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. அர்ப்பணிப்பு உணர்வுடன் ஏழைகளுக்கு சேவை செய்ததோடு, சமூக ரீதியான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியதால் அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தென் கொரியா அறிவித்துள்ளது.
இந்த விருது ஆசிய அளவில் அமைதி, ஜனநாயகம் மற்றும் நீதி போன்ற விஷயங்களுக்காக பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படுவதாகும்.
ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் தேதி இந்த விருது வழங்கப்படும். இந்த விருதுடன் 50,000 அமெரிக்க டாலர்களும் பரிசாக தரப்படும்.
இந்த விருதைப் பெறும் இரண்டாவது இந்தியர் பினாயக் சென் ஆவார். இதற்கு முன் இந்த விருதை மணிப்பூரைச் சேர்ந்த ஜரோம் ஷர்மிளா என்ற மனித உரிமை ஆர்வலர் பெற்றார்.
விநாயக் சென் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஏழைகளுக்கு சேவை செய்ததோடு, சமூக ரீதியான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியவர் என்று விருதுக் குழு தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications