டிஎல்சி, யூடியூபில் வில்லியம், கேட் ராஜ திருமண நேரடி ஒளிபரப்பு
லண்டன்: நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இங்கிலாந்து ராஜ திருமணம் டிஎல்சி தொலைக்காட்சியிலும், யூடியூபிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
உலகமே ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் திருமணம் நாளை மறுநாள் நடக்கிறது. இந்த திருமண நிகழ்ச்சிகள் டிஎல்சி தொலைக்காட்சியிலும், யூடியூபிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இந்தியர்களுக்காக இந்த நிகழ்ச்சி மதியம் 2.30 மணி முதல் ஒளிபரப்பப்படும் என்று அந்த தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் டுவிட்டர் மற்றும் ராஜ திருமணத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ஆகியவற்றில் நிகழ்ச்சிகள் குறித்து அவ்வப்போது செய்தி வெளியிடப்படும். பிலிக்ஆர்(Flickr) மூலம் திருமண புகைப்படங்கள் வெளியிடப்படும்.
இதற்கிடையே, அடுத்த 2 ஆண்டுகளுக்கு கேட்டை வெளியுலகப் பார்வையில் இருந்து விலக்கி வைக்க இளவரசர் வில்லியம் முடிவு செய்துள்ளார்.
தனது தாயார் டயானா பத்திரிக்கை புகைப்படக்காரர்களால் அனுபவித்த பிரச்சனைகள் கேட்டுக்கும் வராமல் இருக்கத் தான் இந்த 'கேட்'டாம்!.
இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த தி டெய்லி எக்ஸ்பிரஸ் கூறியுள்ளதாவது,
இளவரசர் வில்லியம் தனது தாத்தா, பாட்டியின் திருமண வாழ்க்கையை பின்பற்ற விரும்புகிறார். அவர்களும் திருமணம் முடிந்த பிறகு 2 ஆண்டுகள் மால்டாவில் உள்ள கடற்படையில் மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர். எலிசபெத் சொகுசான ராஜ வாழ்க்கை வாழ்கிறார். ஆனால் டயானா அடிக்கடி வெளியுலக பார்வையில்பட்டு பிரச்சனைகளைத் தான் சந்தித்தார்.
எனவே, உலகப் பார்வையில் இருந்து விலகி மகிழ்ச்சியாக வாழ இளவரசர் வில்லியம் முடிவு செய்துள்ளார். புதுமணத் தம்பதிகள் ஆங்க்லிசேவில் உள்ள ஒரு வாடகை பண்ணை வீட்டில் வாழ திட்டமிட்டுள்ளனர்.
எலிசபெத்திடம் இதற்கான அனுமதியும் பெற்றுவிட்டார் வில்லியம். டயானாவுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் கேட்டுக்கும் ஏற்படாமல் பாதுகாப்பதில் வில்லியம் முனைப்பாக இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications