பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே லாரியின் பின்புறம் கார் மோதியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.மேலும், இருவர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். அவர் மனைவி தங்க அமிர்தம்(50). அவர்கள் மகன்கள் வெங்கடாசலம் (30), மாரிமுத்து (27). சோமசுந்தரம் உறவினர்கள் நடராஜன் (55). அவரது மனைவி சுசீலா (50), பாலா (37), பிரேம் (36).
அவர்கள் அனைவரும் சோமசுந்தரத்தின் இரண்டாவது மகன் மாரிமுத்துவுக்கு பெண் பார்க்க நேற்று முன்தினம் இரவு புதுக்கோட்டைக்கு காரில் கிளம்பினார். காரை உறவினர் பாலா ஓட்டினார்.
பெரம்பலூர் அருகே மங்களமேடு பகுதியில் அதிகாலை 5 மணி அளவில் சென்று கொண்டிருக்கையில் அவர்கள் காருக்கு முன் சென்ற லாரியின் டயர் கழன்றது. அதனால் லாரி தாறுமாறாக ஓடியது. உடனே லாரி டிரைவர் பிரேக் போட்டார். அப்போது பெண் பார்க்கச் சென்றவர்கள் கார் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இதில் காரில் இருந்த தங்க அமிர்தம், மாரி முத்து, நடராஜன், சுசீலா, பிரேம் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
வெங்கடாசலம், பாலா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications