தங்கம் விலை இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ 184 உயர்வு!
சென்னை: தங்கம் விலை இன்று மட்டும் சவரனுக்கு ரூ 184 உயர்ந்தது. இதன்மூலம் சவரன் விலை ரூ 16504 ஆக விற்கப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த மாதம் ஒரு பவுன் ரூ. 15 ஆயிரத்து 600-க்கு விற்கப்பட்டது.
இந்த மாதம் விலை தாறுமாறாக உயர்ந்து ரூ. 16 ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த 25-ந் தேதி ரூ. 16 ஆயிரத்து 472-க்கு விற்கப்பட்டது. மறுநாள் ரூ. 200 குறைந்து ரூ. 16 ஆயிரத்து 272 ஆக இருந்தது.
நேற்று மேலும் ரூ. 8 குறைந்து ரூ. 16 ஆயிரத்து 320 ஆக இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் சற்றே ஆறுதல் அடைந்தனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 184 அதிகரித்து ரூ. 16 ஆயிரத்து 504-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ. 2 ஆயிரத்து 63 ஆக இருந்தது.
தங்கத்தின் இந்த திடீர் விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தியாகராய நகர் நகை வியாபாரி ஒருவர் கூறும் போது, தங்கம் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இன்று ரூ. 184 அதிகரித்து விட்டது.
மக்களிடையே தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளதால் விலை திடீரென அதிகரிக்கிறது," என்றார்.
வெள்ளியின் விலையும் கிராம் ரூ 100-ஐ நெருங்கிக் கொண்டுள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 76-55க்கும் ஒரு கிலோ ரூ. 71 ஆயிரத்து 545-க்கும் விற்கப்படுகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி!












Click it and Unblock the Notifications