தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்
சென்னை: சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய கட்சிகளைத் தகுதி நீக்கம் செய்யக் கோரியுள்ள மனுவை தேர்தல் ஆணையம் 6 வார காலத்திற்குள் பரிசீலிக்க வேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
சட்டசபை தேர்தலுக்கு முன் தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் நடத்திய சோதனையில் ரூ. 55 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஆயிரத்து 700 தேர்தல் விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் பல இலவச அறிவிப்புகள் வெளியிட்டன. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதன்பேரில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது,
சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க முடியாது. எனினும், மனுதாரர் அளித்த மனுவை தேர்தல் ஆணையம் 6 வாரங்களுக்குள் பரிசீலித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications