கொளுத்தும் கோடை...குளுகுளு தேசங்களில் ரெஸ்ட் எடுக்க கிளம்பினார் விஜயகாந்த்!
சென்னை: தேர்தல் பயணக் களைப்பு, தமிழகத்தில் நிலவும் கடும் கோடை வெப்பம் போன்றவற்றால், குளுகுளு பிரதேசங்களான லண்டன், இத்தாலி போன்ற நாடுகளுக்கு 13 நாள் டூர் போகிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார். ஓய்வின்றி அவர் பிரசாரம் செய்ததால் தொண்டைவலி ஏற்பட்டது.
கடந்த சில தினங்களாக வீட்டிலேயே அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் ஓய்வெடுக்க விஜயகாந்த் வெளிநாடு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் செல்கிறார். லண்டன், இத்தாலி என ஐரோப்பாவின் குளுகுளு தேசங்களுக்கு அவர் இம்முறை செல்வதகாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் குடும்பத்துடன் செல்லும் . தேர்தல் முடிவுக்கு ஒரு நாள் முன்னதாக (12-ந் தேதி) அவர் சென்னை திரும்புகிறார்.
இவரது கூட்டணியின் தலைவியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் தனது தோழி சசிகலாவுடன் கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications