தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க கடலோரப் பகுதியில் கண்காணிப்பு-ஐஜி
சென்னை: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நீக்கமற தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்கும் வகையில், கடலோரப் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடலோரக் காவல் படையின் கிழக்கு மண்டல கமாண்டர் ஐஜி சர்மா கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்டு சர்மா பேசுகையில்,
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும்போது நமது கடல் எல்லையைத் தாண்டிச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவளத் துறையினர் மூலம் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தவறுதலாக நமது கடல் எல்லையைத் தாண்டி மீன்வளம் செறிந்த பகுதிகளைத் தேடி செல்லும் நமது மீனவர்களை கடலோர காவல் படையினர் எச்சரித்தும் வருகின்றனர்.
இதே போல நமது கடற்பகுதிக்குள் ஊடுருவும் இலங்கை மீனவர்கள் மீதும் கடலோர காவல் படை கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த சில நாள்களில் மட்டும் இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடித்த 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை- தமிழகம் இடையே கடலோரப் பகுதியில் நமது மீனவர்களை காக்கும் வகையில் கடலோர காவல் படையின் கப்பல்கள், ரோந்து படகுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகளில் ரகசிய கண்காணிப்பும் முக்கிய அம்சமாகமாக உள்ளது. முன்னெச்சரிக்கை, வருமுன் காக்கும் நடவடிக்கைகளுக்கு இதுவே மிகவும் அவசியமாகிறது. புலனாய்வு தகவல்களைப் பெறுவதற்கு இது பேருதவியாக அமைந்துள்ளது. கடல்சார் துறை, கடலோர பாதுகாப்பிலும் இது முக்கிய பங்காற்றுகிறது.
இது நாட்டின் 7,500 கிலோ மீட்டர் தூர கடல் எல்லைப் பகுதியில் அத்துமீறல்களை கண்காணிக்கவும் உதவுகிறது. நாட்டின் வணிகப் போக்குவரத்தில் 90 சதவீதம் கடல் வழியாகத்தான் நடைபெறுகிறது.
லட்சத்தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகரித்தது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டதையடுத்து, இப்போது சோமாலியா கரையோரம், அரபிக் கடலின் தென்கிழக்குப் பகுதிகளிலும் கடல் சார் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்திய கப்பல்களை சுற்றி வளைப்பதோடு ஊழியர்களை பிணையக் கைதிகளாக பிடிப்பதிலும் கடற்கொள்ளை கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்தக் கடற்கொள்ளையர்களுக்கும், சில தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பு உள்ளது. சாதாரண வள்ளங்கள் முதல் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் வரை நமது கடற்பகுதியில் ஏராளமான மீன்பிடி கலன்கள் உள்ளன. இதில் பெரும்பாலானவை பதிவு செய்யப்படுவதில்லை.
எனினும், நமது கடற்பகுதியில் ஊடுருவும், சந்தேகத்துக்கு இடமான அன்னிய மீன்பிடி கப்பல்கள், படகுகளைக் கண்டவுடன் தகவல் கொடுக்குமாறு ஒவ்வொரு மீனவ கிராமங்களிலும் மீனவ மக்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர செயற்கைக்கோள் உதவியுடன் கூடிய நீண்ட தூர தடம் அறியும் சாதனங்கள் (எல்.ஆர்.ஐ.டி.), சென்சார் கருவிகள், ஏரேஸ்டட்ஸ் சாதனங்கள், ஆளில்லாத கண்காணிப்பு விமானங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்க செயற்கைக்கோள்கள் மூலம் இயங்கும் நவீன ரேடார்கள் உதவியுடன் ஒருங்கிணைந்த சங்கிலித் தொடர்போன்ற கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய அதி நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் கடலோர காவல் மட்டுமன்றி கடலுக்கு அடியிலும் கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications