பின்லேடனை வேட்டையாட அமெரிக்காவுக்கு உதவிய ஐஎஸ்ஐ

ஆனால், இதை அமெரிக்காவும் ஐஎஸ்ஐயும் மறுத்துள்ளன.
சரியாக 2 வாரத்திற்கு முன்புதான் விக்கிலீக்ஸ் ஒரு தகவலை வெளியிட்டது. அமெரிக்காவின் குவான்டானாமோ முகத்தை அம்பலப்படுத்திய அந்த தகவலில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ குறித்த அமெரிக்காவின் கருத்து வெளிப்பட்டது.
தீவிரவாத அமைப்பாக ஐஎஸ்ஐயை அமெரிக்கா கருதி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பாகிஸ்தானுக்கும், ஐஎஸ்ஐக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. உலக அரங்கில் ஐஎஸ்ஐயின் பெயர் மகா மோசமாக கெட்டுப் போனது.
இந்த நிலையில் விக்கிலீக்ஸ் தகவல் வெளியான அதே காலகட்டத்தில்தான் பின்லேடனை பாகிஸ்தானில் வைத்து வேட்டையாடி வீழ்த்தியுள்ளது அமெரிக்கப் படை.
இந்த இரு சம்பவங்களுக்கும் நேரடியாக தொடர்பு ஏதும் இல்லை என்ற போதிலும், பின்லேடனை வேட்டையாட பாகிஸ்தான் அரசும், ஐஎஸ்ஐயும் உதவியிருக்க வேண்டும் என்றே தெரிகிறது.
இரு வாரங்களுக்கு முன் அமெரிக்கா சென்ற ஐஎஸ்ஐ தலைவர், தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த அளவுக்கு அவரை அமெரிக்க அதிகாரிகள் காய்ச்சி எடுத்ததாகக் கூறப்பட்டது.
ஒசாமா விஷயத்தில் தங்களுக்கு உதவாவிட்டால், ஐஎஸ்ஐயையே ஒழித்துவிடுவோம் என அமெரிக்கா எச்சரித்து அனுப்பியதாகக் கூறப்பட்டது.
எனவே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒசாமாவை போட்டுத் தள்ள அமெரிக்காவுக்கு ஐஎஸ்ஐ உதவியிருக்கக் கூடும் என்றெ கருதப்படுகிறது.
பின்லேடன் வேட்டை குறித்து கருத்து தெரிவித்த அதிபர் ஒபாமா, பாகிஸ்தான் அரசின் முழு ஒத்துழைப்பு இருந்ததால்தான் பின்லேடனை வேட்டையாட முடிந்தது. பாகிஸ்தான் முழுமையாக எங்களுக்கு உதவியதைத் தொடர்ந்தே லேடனை வீழ்த்தினோம் என்று கூறியுள்ளார்.
ஒசாமாவின் உள் வட்டத்துக்குள் அமெரிக்க உளவாளிகள் ஊடுருவ ஐஎஸ்ஐ உதவியிருக்கலாம் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் ஒசாமாவை இந்த வீட்டில் குடிவைத்து அவருக்கு பாதுகாப்பும் அளித்து வந்ததும் ஐஎஸ்ஐ தான் என்றே அமெரிக்கா கருதுகிறது. இந் நிலையில் நேரடியாக ஒசாமா இருக்கும் இடத்தைச் சொல்லாமல், ஒசாமாவை நெருங்குவதற்கு மட்டும் அமெரிக்காவுக்கு ஐஎஸ்ஐ உதவியதாகக் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications