அருணாச்சல் முதல்வர் காண்டூவின் நிலை தொடர்ந்து மர்மத்தில்
இடாநகர்: அருணாச்சல் பிரதேச முதல்வர் டோர்ஜீ காண்டூவுடன் சென்ற ஹெலிகாப்டர் என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து ஹெலிகாப்டரைத் தேடும் பணி நடந்து வருகிறது.
தவாங் பகுதியிலிருந்து இடாநகருக்கு முதல்வர் டோர்ஜீ காண்டூ உள்ளிட்ட 5 பேருடன் கிளம்பிய பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமாகி விட்டது. அது என்ன ஆனது என்பது தெரியவில்லை. முதல்வர் உள்ளிட்டோரின் நிலை குறித்தும் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
ஹெலிகாப்டரைத் தேடும் பணி கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. ஆனால் இதுவரை ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
மோசமான வானிலை நிலவி வருவதால் தேடும் பணியில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும் தற்போது மூ்ன்று இடங்களைக் குறி வைத்து பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தரை மார்க்கமாகவும், வான் மார்க்கமாகவும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈகிள்நெஸ்ட் பறவைகள் சரணாலயம், நாகஜான் பகுதிகளில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதேபோல பூட்டான் நாட்டில் உள்ள மோபி கிராமத்திலும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இஸ்ரோவின் செயற்கைக் கோள் படங்கள் மூலம் கிடைத்த சில முக்கியத் தகவல்களின் அடிப்படையில் இந்த மூன்று இடங்களில் மட்டுமே தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications