'தள்ளிப் போன' ஒசாமா சாவு: ஒபாமாவுக்கு நன்றி கூறுவார்களா வில்லியம், கேட்?

இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா ஒசாமா பின் லேடனை வலை வீசித் தேடி வந்தது. ஆனால் ஒசாமா அமெரிக்காவின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பித்துக் கொண்டே இருந்தார். இறுதியில் ஒசாமாவின் வீட்டில் வைத்தே அவரை அமெரிக்கப் படைகள் துப்பாக்கியால் சல்லடையாய்த் துளைத்துக் கொன்றன.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் நேற்று டிவியில் அதிகம் பார்த்த விஷூவல் மற்றும் செய்தி ஒசாமா கொலைச் செய்திதான். வேறு எதிலுமே நேற்று உலக மக்களுக்கு நாட்டம் போகவில்லை. அந்த அளவுக்கு டிவி முழுவதையும், செய்தி இணையங்கள் என அனைத்தையும் ஒசாமாதான் ஆக்கிரமித்திருந்தார்.
ஏப்ரல் 29ம் தேதியே பின்லேடனைக் கொல்ல உத்தரவிட்டு விட்டார் ஒபாமா. இருப்பினும் மே 2ம் தேதிதான் பின்லேடன் வீழ்த்தப்பட்டார். இதன் காரணமாக வில்லியம், கேட் மிடில்டன் திருமணத்தை உலக மக்கள் பார்க்கும் வாய்ப்பு பாதிக்கப்படாமல் போனது.
ஒருவேளை 29ம் தேதி பின்லேடன் கொல்லப்பட்டிருந்தால், ஒட்டுமொத்தமாக வில்லியம் திருமணத்தை யாரும் பார்திதருக்கவே மாட்டார்கள், கண்டுகொள்ளப்படாத திருமணமாக அது மாறிப் போயிருக்கும். வில்லியம், கேட் திருமணத்தை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனராம். ஆனால் பின்லேடன் அன்றைய தினம் கொல்லப்பட்டிருந்தால் இந்த அளவுக்கு அது பிரமாண்ட திருமணமாக அமைந்திருக்காமல் போயிருந்திருக்கும்.
அந்த வகையில், இங்கிலாந்து ராஜ குடும்பம் ஒபாமாவுக்கு தேங்ஸ் சொல்லித்தான் ஆக வேண்டும்.
இத்தனைக்கும் ஒபாமாவுக்கு திருமணத்திற்கு வருமாறு இங்கிலாந்து ராஜ குடும்பம் அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications