பீதியை உருவாக்கும் வகையில் நமது எம்.ஜி.ஆர். செய்தி-கருணாநிதி கண்டனம்
சென்னை: வாக்கு எண்ணிக்கைக்குச் செல்வோரையு்ம், மக்களையும் பீதிக்குள்ளாக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ள அதிமுகவின் நமது எம்.ஜி.ஆர். ஏடு மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
""ஜெயலலிதா அம்மையாரை நிறுவனராகக்கொண்டு வெளிவரும் அதிமுகவின் '"நமது எம்.ஜி.ஆர்."" நாளேட்டில் 3.5.2011 அன்று '"வாக்கு எண்ணிக்கையைச் சீர்குலைக்க திட்டமா? - தேர்தல் ஆணையம் கடும் அதிர்ச்சி"" என்று தலைப்பிட்டு, அரைப்பக்கத்திற்கு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில் '"ஓட்டு எண்ணிககியின் போது, திமுகவுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன அப்போது அதனை எப்படி எதிர்கொண்டு திமுகவுக்கு சாதகமாக திருப்புவது"" என்பது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், காவல்துறைத் தலைமை இயக்குநர் அலுவலகத்திலேயே கூட்டம் நடத்தி, ஆலோசனைகள் வழங்கியதாகவும், இந்த சதிக்கூட்டம் பற்றி தேர்தல் ஆணையத்திற்கு தகவல் கிடைக்கவே, உண்மைகளைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதென்றும் சொல்லப்பட்டுள்ளது.
இப்படி உண்மைக்கு மாறாகவும், தமிழக மக்களைத் திசை திருப்பி குழப்பம் ஏற்படுத்தவும், மக்கள் மத்தியிலும் வாக்கு எண்ணிக்கைக்குச் செல்ல இருக்கும் அலுவலர்கள் மத்தியிலும் பீதியை உருவாக்கவும், திட்டமிட்டு வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் மீதும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் வெளியிடப்பட்ட செய்தியில் தேர்தல் ஆணையத்தையும் இணைத்து உண்மைகளைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் அப்படி முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அப்படி முயற்சி மேற்கொண்டு, உண்மையைக் கண்டறிந்திருந்தால் அதனை உடனடியாக தேர்தல் ஆணையம் வெளியிடும் என்றும், உண்மைக்கு மாறானது என்று உணர்ந்தால், தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் நம்புகிறேன். தமிழக மக்களூம் அதனையே எதிர்ப்பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications