அன்னாவுக்குப் போட்டியாக ஊழலை எதிர்த்து பாபா ராம்தேவ் சாகும்வரை உண்ணாவிரதம்
மும்பை: ஊழலை ஒழிக்கவும், கறுப்பு பணத்தை மீட்கவும் வலியுறுத்தி பிரபல யோகா குரு பாபா ராம்தேவ் வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இதே விஷயத்துக்காக டெல்லியில் காந்தியவாதி அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்த உண்ணாவிரதத்தின் இறுதியில் ஜன் லோக்பால் சட்ட மசோதா குறித்து பரிசீலிக்க குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
இந்த குழுவில் சிவில் சமூகம் சார்பில் பிரபல வழக்கறிஞர்கள் சாந்தி பூஷன், அவரது மகன் பிரஷாந்த் பூஷன் ஆகியோரும் இடம் பெற்றனர். இதற்கு ராம்தேவ் ஆட்சேபனை தெரிவித்து விமர்சித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் அவரும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்தியாவில் மக்களின் வரிப்பணத்தை ஊழல்வாதிகள் கொள்ளையடிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ண உள்ளது.
ஆகையால் ஊழலை ஒழிக்க வேண்டும். மேலும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்து அதை பொது உடைமையாக்க வேண்டும். ஊழல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். இந்த 3 கோரிக்கைகளை வலியுறுத்தி நான் வரும் ஜூன் மாதம் 4-ம் தேதி முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்.
இந்த கோரிக்கைகளை முன்வைத்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, மொரீஷியஸ் உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் எனது ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications