செல்போனில் மைசூர் விலங்கியல் பூங்கா விலங்குகள் விவரம்

இந்த தொழுல்நுட்பம் இந்தியாவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறை. விலங்குகளைப் பற்றி்க் கூறும் இந்த ஆடியோ கைடு ஆங்கிலம் மற்றும் கன்னட மொழிகளில் உள்ளது.
இது குறித்து தி இந்து நாளிதழுக்கு விலங்கியல் பூங்காவின் எக்சிகியூடிவ் டைரக்டரும், வனப் பாதுகாவலருமான கே.பி. மார்க்கண்டேயா கூறியதாவது,
இந்த புதிய முயற்சிமூலம் சுற்றுலாப் பயணிகள் அழிந்து வரும் விலங்குகள் உள்ளிட்ட பல வகையான விலங்குகளைப் பற்றி அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் வனவிலங்குகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை தெரிவிக்கலாம். போல்டெல் நிறுவனத்தின் கூட்டுமுயற்சில் இந்த ஆடியோ கைடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செல்போனில் ஒரு பட்டனைத் தட்டினால் போதும் அட வனவிலங்குகளைப் பற்றி இவ்வளவு சுவாரஸ்யமான செய்திகளா என்று வியக்கக்கூடும்.
மைசூர் விலங்கியல் பூங்கா டிக்கெட் கவுண்டரில் ரூ. 10 முதல் ஸ்க்ராட்ச் கார்ட் கிடைக்கிறது. அதை வாங்கி ஸ்க்ராட்ச் செய்து அதில் இருக்கும் எண் அல்லது கோடை செல்போனில் பதிந்து ஆடியோ கைடை ஆக்டிவேட் செய்யுங்கள்.
விலங்குகள், பறவைகள் இருக்கும் கூண்டுகளுக்கு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் ஒரு கூண்டு அருகே சென்றவுடன் அதன் எண்ணை செல்போனில் பதிவு செய்தால் உடனே அதில் உள்ள உயிரினம் பற்றிய தகவல் வரும்.
இந்த வசதி கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இது விரைவில் மிகவும் பிரபலமாகும் என்றார்.












Click it and Unblock the Notifications