2720 பேர் கணிதத்தில் 200: விலங்கியலில் ஒருவர் கூட இல்லை
சென்னை: பிளஸ் டூ தேர்வு எழுதியவர்களில் 2 ஆயிரத்து 720 பேர் கணிதத்தில் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், ஓசூர் மாணவி கே.ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்தார்.
ஓசூர் விஜய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவரான கே.ரேகா பெற்ற மதிப்பெண்கள்
தமிழ் 195, ஆங்கிலம் 195, கணிதம், வேதியியல் இயற்பியல் உயிரியல் பாடங்களில் தலா 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
2வது இடத்தில் வேல்முருகன்:
கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவரான வேல்முருகன் 1187 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
4 மாணவர்களுக்கு 3வது இடம்:
நெல்லை வித்யா சகுந்தலா, பெரியகுளம் ரகுநாதன், நாமக்கல் சிந்து கவி, ஓசூர் பி.எஸ்.ரேகா ஆகியோர் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் தலா 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
சமஸ்கிருதத்தை முதல் பாடமாகக் கொண்டு படித்தவர்களில் சென்னை குரோம்பேட்டை எஸ்.ஆர்.டி.எஸ். மாணவி சந்தியா 1191 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். அதே போன்று பிரஞ்சு மொழியை எடுத்து படித்தவர்களில் வித்யோதயா மாணவி ஜெயப்பிரதா 1190 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழில் 3 பேர் முதலிடம்:
தமிழ் பாடத்தில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகாடமி மாணவர்கள் கோகுல கிருஷ்ணன், மாதேஸ்வரன், தினகரன் ஆகியோர் 198 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்துள்ளனர்.
இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் அதிக பட்சமாக 2 ஆயிரத்து 720 மாணவர்கள் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். அடுத்தபடியாக வேதியியலில் ஆிரத்து 243 பேர் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியலில் 615 பேரும், கணிணி அறிவியலில் 223 பேரும், தாவரவியலில் 4 பேரும் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒருவர் கூட விலங்கியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெறவில்லை.
இந்த ஆண்டு தேர்வு எழுதிய 7 லட்சத்து 81 ஆயிரத்து 385 மாணவ-மாணவியரில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 593 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 85.9 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications