பிளஸ்டூ தேர்ச்சி விகிதம் 85.9%-வழக்கம் போல மாணவிகளே அதிகம்
சென்னை: பிளஸ்டூ தேர்வில் ஒட்டுமொத்தமாக 85.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் விகிதம் 85.15 சதவீதமாகும். மேலும் வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் ஓசூர் மாணவி கே.ரேகா மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்தார்.
மாநில அளவில் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 85.9 சதவீத மாணவ, மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.
மாணவிகளே அதிக தேர்ச்சி
மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 89 சதவீதமாக உள்ளது. அதேசமயம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 82.3 சதவீதம்தான்.
ஒவ்வொரு ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த ஆண்டும் அது அப்படியே நடந்துள்ளது.
அதேசமயம், ஒட்டுமொத்த் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications