'இந்தியாவில் தீவிரவாதிகளை அனுப்பி தாக்குதல் நடத்திய பாக். ராணுவம், ஐஎஸ்ஐ'-விக்கிலீக்ஸ்

பாகிஸ்தான் ராணுவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுறுவச் செய்து, அவர்களை இந்தியாவுக்குள் பத்திரமாக அனுப்பி, தீவிரவாத செயல்களில் ஈடுபட அனுமதித்து, ஆதரித்து வந்தது ஐஎஸ்ஐ என்று அந்தத் தகவல் கூறுகிறது.
அமெரிக்க தூதரக தகவல் பரிமாற்றங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ், தற்போது பெரும் சூடாக பேசப்படும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்பான முக்கியத் தகவல் ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் நடைபெற்ற, நடைபெறும் பல்வேறு தீவிரவாத செயல்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐதான் ஆதரித்து, நடத்த தூண்டி வருவதாக அமெரிக்காவுக்குக் கிடைத்த தகவலை வெளியிட்டுள்ளது.
கியூபாவுக்குச் சொந்தமான தீவில் அமெரிக்கா அமைத்துள்ள குவான்டனாமோ சிறையில் உள்ள கைதிகளிடம் நடத்திய விசாரணையின்போது இவை தெரிய வந்ததாக அந்த தகவல் கூறுகிறது.
இந்தியாவுக்குள் போய் தீவிரவாத தாக்குதல்களை நடத்தும் தீவிரவாதிகளை தேர்வு செய்வது பாகிஸ்தான் ராணுவம்தான். இவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்களை, இந்தியாவுக்குள் நைசாக அனுப்பி வைக்க வேண்டியது ஐஎஸ்ஐயின் வேலையாகும்.
இப்படி அனுப்பி வைக்கப்படும் தீவிரவாதிகள், இந்தியாவில் குண்டுவெடிப்புகள், கடத்தல், காஷ்மீரிகளைக் கொல்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்கிறார்கள் என்று குவான்டனாமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு கைதியிடமிருந்து அமெரிக்கப் படையினர் தகவல் பெற்றுள்ளனராம்.
பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத முகாம்கள் நீண்ட காலமாக செயல்படுவது அமெரிக்காவுக்குத் தெரியாமல் இல்லை. இந்த முகாம்களின் செயல்பாடுகள் குறித்து குவான்டனாமோ கைதிகளிடமிருந்து நிறைய தகவல்கள் கிடைத்ததாம்.
லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகளுடன் கைதிகளுக்கு உள்ள தொடர்புகள் குறித்து நடந்த கிட்டத்தட்ட 779 விசாரணைகளின் மூலம் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தீவிரவாத செயல்பாடுகளுக்கு வலுவான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாம்.
சவூதி அரேபியா, அல்ஜீரியா, பாகிஸ்தானைச் சேர்ந்த கைதிகள் பலர் கூறுகையில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாகவும், அங்கு தங்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் அமெரிக்கப் படையினரிடம் தெரிவித்துள்ளனர்.
அப்துல் அஜிஸியா என்ற அல்ஜீரியர் கூறுகையில், நான் லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இருந்தவன். இந்தியாவுக்குச் சென்று இந்தியர்களைக் கொல்வது மட்டுமே எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணி.
என்னை சவூதியில் வைத்து தேர்வு செய்தனர். பின்னர் பாகிஸ்தானில் எனக்கு தீவிரவாத பயிற்சி கொடுத்தனர். பின்னர் காஷ்மீரில் நாங்களில் முதலில் பணி செய்ய இறக்கப்பட்டோம். பிறகு ஆப்கானிஸ்தான் சென்றேன். அங்கு நான் காயமடைந்து மாட்டிக் கொண்டேன் என்றார்.
பாகிஸ்தான் ராணுவத்தில் மேஜராகப் பணியாற்றிய மஸ்த் குல் குறித்து பாகிஸ்தானியக் கைதியான சமன் குல் என்பவர் பல பரபரப்புத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மஸ்த் குல் மிகப் பெரிய தீவிரவாதி. காஷ்மீருக்காக கடுமையாகப் போராடியவர். காபூலில் பல தாக்குதல்களுக்கு அவர்தான் திட்டமிட்டுக் கொடுத்தவர் என்றார்.
இந்த குல், அல் கொய்தாவுடன் தொடர்புடைய ஹிஸ்ப் இ இஸ்லாமி குல்புதீன் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர். ஐஎஸ்ஐ இயக்குநரகத்துடனும் நல்ல தொடர்பு வைத்திருந்தவர்.
காஷ்மீரில் செயல்பட்டு வந்த அனைத்து தீவிரவாத தாக்குதல்களையும், தனது முஸாபராபாத் வீட்டில் இருந்தபடி கண்காணித்து நடத்தி வந்தவர் மஸ்த் குல் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இந்தத் தகவல்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ்ஐயும், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருவது மீண்டும் ஒருமுறை உண்மையாகியுள்ளது.
இந்திய விமானங்களில் குண்டு வைக்க சதி:
இதற்கிடையே, இந்திய விமானங்களில் குண்டு வைத்துத் தகர்க்க பின்லேடனும் உத்தரவிட்டதாக அந்த விசாரணையில் தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்தத் திட்டம் வெற்றி பெறாமல் போய் விட்டதாம்.
இந்த விமான குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இந்தியர்களையே பயன்படுத்துமாறும் பின்லேடன் யோசனை தெரிவித்திருந்தாரம். இந்த யோசனைக்கு ஐஎஸ்ஐயும் உதவியதாக அந்த செய்தி கூறுகிறது.
ஆனாலும் அமெரிக்கா இதையெல்லாம் நிச்சயம் கண்டு கொள்ளப் போவதில்லை. காரணம், இந்தியா அமெரிக்காவில் இல்லையே...
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications