பொதுக்கணக்கு குழு தலைவராக இருக்க முரளி மனோகர் ஜோஷிக்கு தகுதியில்லை: நாராயணசாமி
புதுச்சேரி: பொதுக்கணக்கு குழு தலைவராக இருக்க முரளி மனோகர் ஜோஷிக்கு தகுதியில்லை என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
2ஜி விவகாரத்தில் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி அளித்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. அந்த அறிக்கையை குப்பைத் தொட்டியில் தான் போடவேண்டும்.
அந்த அறிக்கையைத் முரளி மனோகர் ஜோஷி, பாஜகவின் ஏஜென்டாக தயாரித்துள்ளார்.
பொதுக்கணக்கு குழுவில் தற்போதுள்ள 21 உறுப்பினர்களில் காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் ஜோஷி தயாரித்த வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளளனர். இந்நிலையில், அந்த அறிக்கையை சபாநாயகரிடம் முரளி மனோகர் ஜோஷி கொடுத்தது தவறு.
பொதுக்கணக்கு குழுவின் அறிக்கைகளை வெளியில் தெரிவிக்கக் கூடாது என்ற விதிகளை மீறி அவர் செயல்பட்டுள்ளார். எனவே, பொதுக்கணக்கு குழு தலைவராக இருக்க அவருக்கு தகுதியில்லை.
அவர் பல மாநிலங்களுக்கு சென்று பிரதமருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை அகற்றும் வகையிலும் பேசி வருகிறார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருது முரளி மனோகர் ஜோஷிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும்.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க தெம்பு இல்லாத பாஜக ஊழல் குறித்து பேசாமல் இருப்பது நல்லது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications