தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல விருதுநகர் முதலிடம்
சென்னை: பிளஸ்டூ தேர்வு தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
தமிழகத்திலேயே விருதுநகர் மாவட்டம்தான் எப்போதும் பத்தாவது மற்றும் பிளஸ்டூ தேர்வுகளில் அதிக அளவிலான தேர்ச்சி விகிதத்தைப் பெற்று வருகிறது. இந்த ஆண்டும் அது தொடர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 19,032 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில் மாணவியர் எண்ணிக்கை மட்டும் 9896 ஆகும். இவர்களில் 18,094 மாணவ, மாணவியர் பாஸாகியுள்ளனர். இது 95.07 சதவீதமாகும். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.18 சதவீதம். மாணவியரின் தேர்ச்சி விகிதம் 96.70 சதவீதம்.
கடந்த 25 வருடங்களாக பிளஸ்டூவில் விருதநகர் மாவட்டம்தான் தமிழகத்திலேயே அதிக அளவிலான தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது சாதனை விஷயமாகும். இங்குள்ள பள்ளிகளில் பாடம் நடத்தப்படும் விதம், மாணவ, மாணவயரின் படிப்பு ஆர்வம் என பல அம்சங்கள் இதற்குக் காரணமாக உள்ளன. சிறந்த ஆசிரியர்களும் ஒரு முக்கியக் காரணமாகும்.
தூத்துக்குடிக்கு 3-நெல்லைக்கு 5வது இடம்
பிளஸ்டூ தேர்ச்சி விகிதத்தில் இவ்வாண்டு தூத்துக்குடி மாவட்டம் 3வது இடத்தையும், நெல்லை மாவட்டம் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
73.56 சதவீத தேர்ச்சி பெற்ற அரியலூர் மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம் வருமாறு:
விருதுநகர் 95.7
நாமக்கல் 93.11
தூத்துக்குடி 93.7
சிவகங்கை 92.95
நெல்லை 92.92
தேனி 91.28
கோவை 90.97
ஈரோடு 90.91
சென்னை 90.76
மதுரை 90.56
தஞ்சாவூர் 89.51
திருப்பூர் 89.48
கரூர் 89.5
பெரம்பலூர் 88.49
கன்னியாகுமரி 88.48
ராமநாதபுரம் 86.18
திண்டுக்கல் 85.45
சேலம் 84.69
தர்மபுரி 83.84
காஞ்சிபுரம் 83.6
நீலகிரி 82
கடலூர் 82
திருவள்ளூர் 81.7
நாகை 81
புதுக்கோட்டை 80.57
திருவண்ணாமலை 79.72
வேலூர் 78.6
விழுப்புரம் 77.34
திருவாரூர் 76.6
கிருஷ்ணகிரி 75
அரியலூர் 73.56
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications