தந்தை பின்லேடன் கொலை குறித்து ஐ.நா. விசாரிக்க வேண்டும்- மகன்கள்

இதுகுறித்து பின்லேடனின் மகன்கள் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது...
எங்களது தந்தையை அமெரிக்கப் படையினர் கொன்றுள்ள செயல் மிகவும் அத்துமீறிய, காட்டுமிராண்டித்தனமான செயலாகும். அவரது உடலை கடலில் வீசியதும் கண்டனத்துக்குரியத.
ஏன் எங்களது தந்தையை கைது செய்ய அமெரிக்கப் படையினர் முயலவில்லை. அவரை கோர்ட்டில் நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்பதை அமெரிக்கா விளக்க வேண்டும்.
எங்களது தந்தையின் மரணப் பின்னணி குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும். அடிப்படை மனித உரிமைகள், சட்ட நெறிமுறைகளைக் கூட அமெரிக்கா கடைப்பிடிக்கவில்லை. ஆயுதமே இல்லாத ஒரு நிரபராதியை காட்டுமிராண்டித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளது அமெரிக்கா. அவரது உடலை கடலில் வீசிய செயலும் நியாயமே இல்லாதது.
அரசியல் பிரச்சினைகளுக்கு இப்படிப்பட்ட படுகொலைகள் தீர்வல்ல. எங்களது தந்தையின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் அபோத்தாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை அதிரடியாக கொன்ற அமெரிக்கப் படையினர் உடலை கடலில் வீசி விட்டனர். பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட படங்களையும் அவர்கள் இதுவரை வெளியிடவில்லை. அவை மிகவும் கோரமாக இருப்பதால் வெளியிட்டால் பிரச்சினை வரும் என்று அமெரிக்கா காரணம் கூறியுள்ளது. இதனால் பின்லேடன் வேட்டையாடப்பட்ட விதம் பெரும் மர்மமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் இதுகுறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்று பின்லேடனின் மகன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications