புதுக்கோட்டை அருகே வெடி விபத்தில் இருவர் பலி - மூன்று பேர் படுகாயம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வெடி விபத்தில் இருவர் பரிதாபமாக பலியானார்கள். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்து உள்ளது அழகாபுரி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவர் இதே பகுதியில் வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார்.
இந்த நிலையில் பொன்னழகி அம்மன் கோயில் திருவிழாவில் வாணவேடிக்கை நடத்த சுந்தரத்திற்கு ஆர்டர் கிடைத்தது.
இதனையடுத்து, கடந்த 9 ம் தேதி சுந்தரமும், வெடிகள் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்யும் ஆறுமுகமும் என்பவரும் வாணவேடிக்கைக்கு தேவையான சுந்தரம் வீட்டிற்கு வெடிகளை கொண்டு வந்தனர்.
பின்பு அவர்கள், வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திண்ணையில் வைத்திருந்த வெடிகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் சுந்தரத்தின் அண்ணன் மனைவி செல்வி (40) மற்றும் அவரது பேரன் பிரபாகரன் (10)ஆகியோர் அதே இடத்தில் உடல் சிதறி பலியானார்கள்.
மேலும் செல்வியின் மகன் சரவணன் (30), தங்கை யோகா, ஆறுமுகம் ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்திற்கு காரணமான வெடிகள் தயாரிக்கும் ஆலை உரிமையாளர் சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர். மேலும், இது குறித்து திருமயம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications