தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை-பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஏப்ரல் 13ம் தேதியே தமிழக சட்டசபைக்கு வாக்குப்பதிவு நடந்து விட்டது. ஆனால், மேற்கு வங்க தேர்தல் முடியும் வரை காத்திருந்த தமிழகம், நாளை வாக்கு எண்ணிக்கைக்குச் செல்கிறது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 78.80 சதவீத அளவுக்கு வாக்குககள் பதிவாகியுள்ளதால் அத்தனை அரசியல் கட்சிகளும் ஒருவித பதட்டத்துடனேயே உள்ளன.
234 தொகுதிகளின் வாக்குகள் தமிழகம் முழுவதும் 91 மையங்களில் எண்ணப்படுகின்றன. இந்த மையங்களில் ஒவ்வொரு அறையிலும் ஒரு தொகுதி வாக்குகள் மட்டுமே எண்ணப்படும்.
தமிழ்நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கையில் 16,966 பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். வாக்கு எண்ணிக்கையின்போது 45 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீஸார் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள். 45 கம்பெனிகளில், 27 கம்பெனி வீரர்கள் ஏற்கனவே வந்துவிட்டனர். மீதம் உள்ள 18 கம்பெனி வீரர்கள் இன்று விமானம் மூலம் வருகின்றனர். அவர்களில் 9 கம்பெனிகள் சென்னைக்கும், 5 கம்பெனிகள் திருச்சிக்கும், 4 கம்பெனிகள் மதுரைக்கும் அனுப்பப்படுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திலேயே வாகனங்கள் அனைத்தும் தடை செய்யப்படும். வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்பவர்கள் யாராக இருந்தாலும், கலெக்டராக இருந்தாலும் அவரது கார் வர முடியாது.
3 அடுக்குப் பாதுகாப்பு:
தேர்தல் கமிஷன் சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை இருந்தால்தான் ஓட்டு எண்ணும் மையத்திற்குள் நுழைய முடியும்.
இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தண்ணீர் உள்ளிட்ட திரவப்பொருட்கள், மை அடைத்த பேனா, தீப்பெட்டி, சிகரெட், சிகரெட் பற்றவைக்கும் லைட்டர், செல்போன் போன்ற பொருட்களை உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறுகையில், வாக்கு எண்ணும் இடத்திற்குள் தேர்தல் பார்வையாளர் மட்டும் செல்போன் வைத்திருக்கலாம். மற்றவர்கள் யாரும் செல்போன் வைத்திருக்கக் கூடாது. அதே நேரத்தில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் பத்திரிகையாளர்கள், வேட்பாளர்கள், தலைமை ஏஜெண்டு, தேர்தல் அதிகாரி ஆகிய 4 தரப்பினரும் செல்போன் கொண்டு செல்லலாம்.
ஆனால் வாக்கு எண்ணும் இடத்திற்குள் அவர்கள் செல்லும் போது யாரிடமாவது அவற்றைக் கொடுத்துவிட்டுத்தான் செல்லவேண்டும். பத்திரிகையாளர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மட்டுமே செல்போனை பயன்படுத்தலாம்.
8 முதல் 14 மேசைகள்:
எண்ணிக்கை தொடங்கிய உடன் பத்திரிகையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க மொத்தமாக செல்லக்கூடாது. 10 பேர் அல்லது 15 பேர்களாக 2 அல்லது 3 குரூப் ஆக சென்று படம் எடுக்கலாம். ஆனால் எந்த சின்னத்திற்கு ஓட்டு அதிகம் விழுந்திருக்கிறது என்பதை காட்டும் வகையில் படம் எடுக்கக்கூடாது.
ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குகள் எண்ண 8 முதல் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்கள் அதிகாலை 5 மணிக்கே வந்து விட வேண்டும். அப்போது யார் எந்த மேசையில் எண்ணுவார்கள் என்ற பணி ஒதுக்கப்படும்.
சரியாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
எண்ணிக்கை தொடங்குவது முதல் எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படும் வரை அனைத்தும் வீடியோ எடுக்கப்படும். ஒவ்வொரு சுற்று முடிவும் வீடியோவில் பதிவு செய்த பின்னர் அதை பெரிய திரையில் காண்பிக்கப்படும். போர்டில் எழுதிப் போடப்படும். ஒலிபெருக்கியில் அறிவிக்கப்படும். அது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தின் உள்ளேயும் கேட்கும். வெளியேயும் கேட்கும்.
4 அல்லது 5 வகையான முறையில் வாக்கு எண்ணிக்கையை உறுதி செய்வதால் எந்தவித தில்லுமுல்லும் இல்லாமல் அமைதியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று நம்புகிறேன்.
ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையை சரி பார்த்த பின்னரே அடுத்த சுற்று தொடங்கும். கடைசி 2 சுற்று எண்ணுவதற்கு முன்பாகவே, தபால் ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவித்தாக வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்படவில்லை என்றால் கடைசி இரு சுற்றுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
எண்ணிக்கை முடிந்த போது இரு வேட்பாளர்களுக்கு இடையே ஆயிரம் வாக்குகள் அளவில் வித்தியாசம் இருந்தால் தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்படும்.
எண்ணிக்கை தொடங்குவது முதல், இறுதியாக தொகுதி முடிவு அறிவிக்கப்படும் வரை தேர்தல் பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில்தான் இருக்க வேண்டும். வேறு தனி அறையில் இருந்து டி.வி. பார்க்க முடியாது. ஓய்வு எடுக்க முடியாது. தேர்தல் அதிகாரியின் மேசை அருகேதான் டேட்டா என்ட்ரி மேஜையும் இருக்க வேண்டும்
என்றார்.
மீண்டும் திமுகவோ அல்லது அந்தக் கூட்டணியோ வென்று கருணாநிதியே மீண்டும் ஆட்சியில் அமருவாரா அல்லது அதிமுக ஆட்சியைப் பிடித்து ஜெயலலிதா முதல்வராவாரா என்பது நாளை பிற்பகலுக்குள் தெரிந்துவிடும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications