அயோத்தி பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண முடியாது: ஜெயேந்திரர்

சேலத்தில் உள்ள சங்கர மடத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கிய அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அயோத்தி விவகாரம் சுலபமாக தீர்க்கக் கூடியது அல்ல. வாஜ்பாய் ஆட்சியில் இந்து அமைப்புகளையும், சன்னி வக்பு வாரியத்தையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், என்ன காரணத்தாலோ பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள் மறுநாளே நீதிமன்றத்தை நாடினர்.
அயோத்தி பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலமோ, சட்டரீதியாகவோ தீர்வு காணவே முடியாது. ஒருவேளை நீதிமன்றத்தின் மூலம் இறுதித் தீர்ப்பு கிடைத்தாலும் அது என்றும் நிலைத்திருக்காது. பேச்சுவார்த்தை மூலமே இந்த விஷயத்தில் நிரந்தர- சுமூகத் தீர்வு காண முடியும். அதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
அயோத்தி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இப்போது மீண்டும் முயற்சி நடைபெறுகிறது. வரும் 14ம் தேதி இது தொடர்பாக இரு மதத் தலைவர்களும் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் நடக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள நான் செல்ல டெல்லி செல்கிறேன்.
அயோத்தியில் மடத்துக்கு அருகில் உள்ள கட்டடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதில் சன்னி வக்பு வாரியத்தைச் சேர்ந்தவர்களும், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர். அனேகமாக இந்த பேச்சுவார்த்தையில் இறுதித் தீர்வு எட்டப்படும் என்று எண்ணுகிறேன். அயோத்தி பிரச்னையில் விட்டுக்கொடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்லாமிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
14ம் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். பொதுவாக சமயம் தொடர்பான பிரச்னைகளுக்கு நீதிமன்றத்தை அணுகாமல் பேசித் தீர்ப்பதே நல்லது.
தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான். ஆனால், ஆன்மிக அரசு ஆட்சிக்கு வர வேண்டும். எங்களை யார் ஆதரிக்கிறார்களோ அவர்களையே நாங்களும் ஆதரிப்போம் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications