சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது-பலத்த பாதுகாப்பு

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை - ஒரு மின்னல் பார்வை:
- மொத்த தொகுதிகள்- 234
- வாக்கு எண்ணும் மையங்கள்- 91
- வாக்கு எண்ணும் பணியாளர்கள்- 16,966
- மத்திய பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை- 45 கம்பெனி சிஆர்பிஎப் வீரர்கள்
- வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலேயே வாகனங்கள் அனைத்தும் தடை செய்யப்படும். கலெக்டராகவே இருந்தாலும் அதற்கு மேல் நடந்துதான் வர வேண்டும்.
- ஐடி கார்டைக் காட்டி விட்டுத்தான் மையத்திற்குள் நுழைய வேண்டும்
- வாக்கு எண்ணும் மையத்திற்குள் தண்ணீர் உள்ளிட்ட திரவப்பொருட்கள், மை அடைத்த பேனா, தீப்பெட்டி, சிகரெட், சிகரெட் பற்றவைக்கும் லைட்டர், செல்போன் போன்ற பொருட்களை உள்ளே கொண்டு செல்லக் கூடாது.
- வாக்கு எண்ணும் இடத்திற்குள் தேர்தல் பார்வையாளர் மட்டும் செல்போன் வைத்திருக்கலாம். மற்றவர்கள் யாரும் செல்போன் வைத்திருக்கக் கூடாது. அதே நேரத்தில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் பத்திரிகையாளர்கள், வேட்பாளர்கள், தலைமை ஏஜெண்டு, தேர்தல் அதிகாரி ஆகிய 4 தரப்பினரும் செல்போன் கொண்டு செல்லலாம்.
- ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்குகள் எண்ண 8 முதல் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கிறது.
- 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணி ஆரம்பமானது. 8.30 மணிக்கு பிற ஓட்டுக்கள் எண்ணப்படும். 9 மணியளவில் தான் முதல் சுற்று முடிவு தெரியவரும்.
- ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையை சரி பார்த்த பின்னரே அடுத்த சுற்று தொடங்கும். கடைசி 2 சுற்று எண்ணுவதற்கு முன்பாகவே, தபால் ஓட்டு எண்ணிக்கை முடிவு அறிவித்தாக வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்படவில்லை என்றால் கடைசி இரு சுற்றுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
வாக்கு எண்ணும் மையங்களில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்பட அனைத்துக் கட்சித் தொண்டர்களும் குவிந்துள்ளனர்.
தமிழகம் தவிர கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் மாநிலங்களிலும் இன்று காலை சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications