இன்று டாஸ்மாக் மதுக் கடைகள் கிடையாது!
Subscribe to Oneindia Tamil

தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதையடுத்து பல்வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல குடிகாரர்களால் பிரச்சினை வந்து விடக் கூடாது என்பதற்காக இன்று டாஸ்மாக் மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல ஹோட்டல்களில் உள்ள மது பார்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்றே மதுக் கடைகளில் குடிகாரர்கள் கூட்டம் அலை மோதியது. ஏராளமான பேர் அடித்துப் பிடித்து பல்வேறு வகையான மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு ஆனந்தமாக சென்றதைக் காண முடிந்தது. பல கடைகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.
கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் தடுக்க போலீஸாரும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications