சிபிஎம்மிலிருந்து தாவி திமுகவில் சேர்ந்து போட்டியிட்ட கோவிந்தசாமிக்கு நெத்தியடி
திருப்பூர் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி, திமுகவில் சேர்ந்து திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட கோவிந்தசாமிக்கு, அத்தொகுதி மக்கள் மிகச் சரியான பதிலடியைக் கொடுத்து விரட்டியுள்ளனர். தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர் என்ற பெருமையை கோவிந்தசாமி பெற்றுள்ளார்.
திருப்பூர் தொகுதி வடக்கு என்று பிரிக்கப்படும் முன்பு அத்தொகுதியில் உறுப்பினராக இருந்தவர் கோவிந்தசாமி. ஆனால் தனது பதவிக்காலத்தின் கடைசியில் அவர் திமுகவுக்கு ஆதரவாக மாறினார். கட்சிக்குள் இருந்து கொண்டே திமுககாரர் போல செயல்பட்டார். பெருமளவில் பணம் வாங்கி விட்டார் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்த நிலையில் கடைசி நேரத்தில் திமுகவுக்குத் தாவி திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு தொகுதி மக்கள் சரியான பாடம் கறிப்பிப்பார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உறுதிபடக் கூறியிருந்தனர். தற்போது அது நடந்து விட்டது.
இத்தேர்தலில் கோவிந்தசாமியை, அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆனந்த், 73,271 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி படு தோல்வி அடையச் செய்துள்ளார்.
மேலும் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்ட வேட்பாளர் என்ற பெயரும் கோவிந்தசாமிக்குக் கிடைத்துள்ளது.
கோவிந்தசாமிக்கு வெறும் 40,369 ஓட்டு மட்டுமே கிடைத்தது. ஆனந்த்துக்கு 1,13,640 ஓட்டுக்கள் கிடைத்தன.
இதேபோல கட்சி மாறிப் போட்டியிட்ட பலருக்கும் மரண அடி கொடுத்துள்ளனர் வாக்காளர்கள்.
மண்ணைக் கவ்விய முத்துச்சாமி-சேகர்பாபு
அதிமுகவுக்கு நேரம் சரியில்லாமல் இருந்தபோது கட்சியை விட்டு ஓடி திமுகவில் அடைக்கலம் புகுந்தவர்கள் முத்துச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவாக இருந்த பி.கே.சேகர்பாபு ஆகியோர்.
இவர்களில் அனிதாவைத் தவிர மற்ற இருவரும் படு தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
ஈரோட்டில் முத்துச்சாமி, தேமுதிகவிடம் மண்ணைக் கவ்வினார். ஆர்.கே.நகரில் அதிமுகவின் வெற்றிவேலிடம் மண்ணைக் கவ்வினார் சேகர்பாபு. அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தப்பிப் பிழைத்து திருச்செந்தூரில் வென்றுள்ளார்.
அதேபோல மதிமுகவிலிருந்து திமுகவுக்குத் தூக்கப்பட்டவர்கள் மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன்.
இவர்களில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட்ட கண்ணப்பன் படு தோல்வி அடைந்தார். அதேசமயம், கம்பம் தொகுதியில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் எப்படியோ வென்று விட்டார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications