பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் பதவியில் இருந்து குமரி அனந்தன் ராஜினாமா
மதுரை: பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் பதவியில் இருந்து குமரி அனந்தன் ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர் குமரி அனந்தன் அரசு செயலாளருக்கு அனுப்புள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது
நான் , சுதேசியத்தில் பற்றுக் கொண்டவன் என்ற காரணத்தினால் பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் என்ற பொறுப்பை எனக்கு அளித்த தமிழக அரசுக்கு நன்றி செலுத்துகிறேன்.
ஒரு லிட்டர் ரூ 3.50 என்று விற்ற பதநீருக்கு பத்து ரூபாய் என்று விலையை உயர்த்தித் தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பனைமரத் தொழிலாளி, தான் மட்டுமே எடுத்துச் செல்லும் வகையில் கருவியொன்றை கனமற்ற உலோகத்தில் செய்ய வேண்டும்.
பனைச் செல்வம் பெருஞ்செல்வம். உடல் நலம் தரும் செல்வம். அதை வளர்க்கவும் நிற்கின்ற பனைகளைச் சிறந்த முறையில் பயன்படுத்தவும் மேற்கொண்டு பல திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்த வேண்டும்.
ஊதியம் இல்லாத வேலையினாலும் எளியோர்க்கும் நாட்டிற்கும் செய்யும் தொண்டாக மனநிறைவோடு அரசு தந்த பொறுப்பில் இருந்து பணியாற்றினேன்.
நான் பணியாற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்த அரசுக்கும், நான் பதவியில் இருந்த போது ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இன்று அந்தப் பொறுப்பில் இருந்து விலக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளதைத் தொடர்ந்து மரபுப்படி குமரி அனந்தன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications