120 புதிய பொறியியல் கல்லூரிகள் அனுமதி கோரி விண்ணப்பம்: அதிகரிக்கும் இடங்கள்
சென்னை: தமிழகத்தில் 120 புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொறியியல் படிப்பிற்கான இடங்கள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பி.இ. , பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் இன்று அதிகாலையிலேயே துவங்கியது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்ப வினியோகத்தை துணை வேந்தர் மன்னர் ஜவகர் தொடங்கி வைத்தார்.
இது குறித்து மன்னர் ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது,
வரும் கல்வியாண்டிற்கான பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 62 இடங்களில் வழங்கப்படுகிறது. இதில் சென்னையில் மட்டும் 5 இடங்களில் விண்ணப்ப வினியோகம் நடக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 488 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதி்ல் 460 சுயநிதி கல்லூரிகளும் அடக்கம். இதன் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 20 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கிடைக்கின்றன.
கடந்த ஆண்டு கலந்தாய்வு முடிந்த பிறகு 8 ஆயிரத்து 172 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு 400 பொறியியல் கல்லூரிகள் தங்கள் பாடப்பிரிவுகளை அதிகரிக்கக் கோரி மனு அளித்துள்ளனர். இதனால் ஏற்கனவே உள்ள க்லலூரிகளிலேயே 30 ஆயிரம் கூடுதல் இடங்கள் கிடைக்கும். மேலும், இந்த ஆண்டில் 120 புதிய கல்லூரிகள் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளன. இதனால் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு 472 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. இந்த ஆண்டு புதிதாக 16 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 78 ஆயிரம் முதல் தலைமுறை மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் உயரும். அண்ணா பல்கலைக்கழகத்தில் 20 கவுண்டர்களில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications