ஜெ தலைமையில் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம்-அடுத்த வாரம் எம்எல்ஏக்கள் பதவியேற்பு?

இக் கூட்டத்தில் சட்டசபைக் கூட்டம், பட்ஜெட் தயாரிப்பு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
முன்னதாக முதல்வராகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா நேற்று மாலை சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கிய நிலையில், 33 அமைச்சர்களும் இன்று கோட்டையில் தங்களது பணிகளைத் தொடங்கினர்.
புதிய அமைச்சர்களை சந்திக்க அவர்களது ஆதரவாளர்கள் திரண்டுள்ளதால், கோட்டையில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் ஜெயலலிதா தலைமையில் இன்று பகல் 2 மணிக்கு முதல் அமைச்சரவை கூட்டம் கூடியது. சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதில் சட்டசபைக் கூட்டம், பட்ஜெட் தயாரிப்பு, தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவை குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே புதிய அமைச்சர்களுக்கு இன்னும் வீடுகள் தயாராகததால் அவர்கள் சேப்பாக்கம் உள்ளிட்ட விருந்தினர் இல்லங்களில் தங்கியுள்ளனர்.
சட்டமன்றத்தை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் புதிய எம்எல்ஏக்கள் அடுத்த வாரம் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.
தமிழக நிதி நிலவரம்-ஆளுநரிடம் தணிக்கைத் துறை அறிக்கை:
இந் நிலையில் தமிழகத்தின் 2009-10ம் ஆண்டு நிதி நிலவரம் குறித்த அறிக்கையை இந்திய தணிக்கைத் துறை ஆளுநர் பர்னாலாவிடம் வழங்கியது.
இந்த அறிக்கை சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும். அரசியல் சட்டத்தின்படி, மாநில அரசின் கணக்குகள் குறித்த அறிக்கையை ஆளுநரிடம் தணிக்கைத் துறை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications