ஜெ ராசி சென்டிமெண்ட்: 9க்கு விடுதலை 7க்கு வரவேற்பு
மதுரை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ராசி எண் 9-க்கு பதில் 7 ஆக மாறியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழக முதல்வராகியுள்ளார். அவர் நேற்று(16-5-2011) தான் முதல்வராக பொறுப்பேற்றார்.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த சில வருடங்களாக ராசி எண் 9 என்று கூறப்பட்டது. இதனால் ஜெயலலிதா பல்வேறு முக்கிய முடிவுகளை 9-ம் தேதி தான் எடுப்பார். மேலும் அவரது செயல்பாடுகள் அனைத்தும் கூட்டுத் தொகை 9 வருமாறு அமைத்துக் கொண்டார்.
ஆனால் தற்போது, அவர் 9-க்கு விடுதலை கொடுத்துவிட்டு 7-ம் எண்ணுக்கு மாறியுள்ளார். பதவியேற்ற நாள் 16. இதன் கூட்டுத்தொகை 7.
ஜெயலலிதா அமைச்சரவையில் 33 அமைச்சர்கள். ஆனால் முதல்வர் ஜெயலலிதாவைச் சேர்த்து 34. இதன் கூட்டுத் தொகை 7.
பதவியேற்ற பிறகு புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதல் அமைச்சர் அறையில், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 7 கோப்புகளில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
இதனால் இனி வரும் காலங்களில் ஜெயலலிதாவின் ராசி எண் 7 வருமாறு பல்வேறு நடவடிக்கைகள் இருக்கும்படி அமைத்துக் கொள்வார் என்று கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications