கரூர் - உர மோசடி வழக்கில் 4 முக்கிய அதிகாரிகளுக்கு ஜாமீன்
கரூர்: விவசாயிகளுக்கு வழங்கி வேண்டிய உரத்தை தனியார் நிறுவனங்களுக்கு விற்று பெரும் மோசடி செய்த வழக்கில் 4 முக்கிய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருச்சியிலுள்ள தமிழ்நாடு கூட்டுறவு சந்தையியல் கூட்டமைப்பு (டான்பெட்) நிறுவனத்திடமிருந்து தாந்தோன்றிமலை வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்தின் தனி அலுவலர் செல்லமுத்து உரங்களை விவசாயப் பணிகளுக்கு வழங்குவதற்காக மானிய விலையில் பெற்று, அவற்றை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடி செய்தார்.
இந்த ஊழல் குறித்து புகார் குறித்து உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி்ருச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா கோரியிருந்தார். ஆனால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. தாந்தோணி யூனியன் வேளாண்மை பொறியல் தனி அலுவலர் செல்லமுத்து மட்டும் சஸ்பெணட் செய்யபட்டார்.
இந்த நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் நடந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் வேளாண்மைப் பொறியியல் சேவை கூட்டுறவு மையத்தின் துணைப் பதிவாளர் பாக்கியநாதன், கரூர் வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறையில் புகார் அளித்தார்.
அதன் பேரில், வணிகவியல் குற்றப் புலனாய்வுத் துறை தனிப் படை அமைத்து தாந்தோன்றிமலை அக்ரோ சர்வீஸ் முன்னாள் தனி அலுவலர் செல்லமுத்து (48),திருச்சி டான்பெட் துணை மேலாளர் பரமசிவம் (57), திருச்சி வேளாண்மைத் துறை உதவி இயக்குநராக இருந்த மீனாட்சிசுந்தரம் (53), கரூர் காகிதபுரத்திலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜகோபாலன் (53), உதவிப் பொது மேலாளர் கல்யாணசுந்தரம் (56) ஆகியோர் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜகோபாலன் (53), உதவிப் பொது மேலாளர் கல்யாணசுந்தரம் (56), பாலி்மர் லாறி அன் கோ பொது துணை மேலாளர்(பர்சேஸ்) முருகன், உதவி பொது மேலாளர்அனிமேஸ் சட்ட போத்தியா ஆகிய 4 பேருக்கு குளித்தலை நீதி மன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications