திருப்பூர் அருகே நில அதிர்வு: கல் குவாரிகள் காரணமா?
திருப்பூர்: மூலனூரில் ஏற்பட்ட நில அதிர்வு பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது மூலனூர். இதன் அருகே கிளாங்குன்றல், மூக்கு தரிச்சாம்பாளையம், வண்ணாபட்டி, மூவேந்தர் நகர், சின்னார வலசு, மேற்குபதி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இன்று காலை 6.40 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
நில அதிர்வு 15 வினாடிகள் நீடித்தது. அதிர்வின்போது வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டன. நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த பொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிக்கு ஓடி வந்தனர். சின்னார வலசு கிராமத்தில் சில வீடுகளில் ஓடுகள் சரிந்து விழுந்தது.
இரண்டாவது முறை:
கடந்த 2 மாதத்திற்கு முன்பும் மூலனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. பொது மக்களிடையே அச்சமும் பீதியும் ஏற்பட்டதால் தாராபுரம் ஆர்.டி.ஓ.அழகு மீனா, தாசில்தார் சாமியப்பன் ஆகியோர் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர்.
கல்குவாரிகள் காரணமா?:
நில அதிர்வு ஏற்பட்டால் சேலத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் பதிவாகும். ஆனால் நில அதிர்வு ஏற்பட்ட அன்று அதிர்வு ஏதும் பதிவாகவில்லை. மூலனூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. அதிகாலை நேரங்களில் இந்த குவாரிகளில் வெடி வைத்து பாறைகளை தகர்ப்பது வழக்கம். அதன் காரணமாகவும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications