கோவையில் கல்யாண வீட்டில் ‘திருடர்’ கைவரிசை - 16 சவரன் அபேஸ்!
கோவை : கோவையில் திருமண மண்டபத்தில் மணமகன் அறையில் இருந்த 16 சவரன் நகை திருடு போனது.
திருமணம்
ஈரோடு மாவட்டம், பவானி - காரியாம்பாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணியின் மகன் ஹரிபிரசாந்த் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றுகிறார். இவருக்கும், கோவை,ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியசாமியின் மகள் மாலதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவரும் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். திருச்சி ரோடு, ஆண்டாள் திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது.
நகை மிஸ்ஸிங்
மணமகனின் தங்கை பவித்ரா, தாய்மாமன் மகள் அர்ச்சனா ஆகியோரது நகைகள் ஒரு சூட்கேஸில் வைக்கப்பட்டு மணமகன் அறையில் பத்திரப்படுத்தப்பட்டிருந்தது. முகூர்த்த நேரம் நெருங்கும்போது தங்களது நகைகளை அணிய மணமகன் அறையை அவர்கள் திறந்தனர். நகை வைக்கப்பட்டிருந்த பூட்டியிருந்த சூட்கேஸ் திறந்து கிடந்தது. உள்ளே இருந்த 16 சவரன் நகையுடன் துணிப்பையும் காணாமல் போயிருந்தது.
போலீசில் புகார்
இதனால், திருமண மண்டபமே அதிர்ச்சியில் உறைந்தது. சிங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் பறந்தது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் திருமண மண்டபத்துக்கு விரைந்தனர். மண்டபத்தில் இருந்த வேலைக்காரர்கள், சமையல்காரர்கள் விசாரிக்கப் பட்டனர். அவர்களது உடமைகள் சோதனையிடப்பட்டன.
வேலைக்காரர்களிடம் எதுவும் கிடைக்காத நிலையில், உறவினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவெடுத்தனர். திருமணத்துக்கு வந்தவர்களை அவமரியாதை படுத்தவேண்டாம் என மணமக்களின் பெற்றோர் கேட்டுக் கொண்டதால் உறவினர்களிடம் விசாரணை நடத்தவில்லை. திருமண நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருந்த வீடியோகிராபர், சந்தேகப்படும்படியான ஒரு நபர் மண்டபத்தில் நடமாடிக் கொண்டிருந்ததாக போலீசிடம் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications