டிஜிபியாக பொறுப்பேற்றார் ராமானுஜம்-போலீஸாருக்கு 4 கட்டளைகள் பிறப்பித்தார்
சென்னை: தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு மற்றும் உளவுத்துறை டிஜிபியாக ராமானுஜம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியில் அமர்ந்ததும் முதல் வேலையாக போலீஸாருக்கு நான்கு கட்டளைகளை அவர் பிறப்பித்துள்ளார்.
நேற்று பிற்பகல் டிஜிபி அலுவலகத்திற்கு வந்து ராமானுஜம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பதவியிலிருந்து இடம் மாறும் டிஜிபி போலாநாத் வாழ்த்து தெரிவித்து பொறுப்பை ஒப்படைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராமானுஜம். அப்போது அவர் கூறுகையில்,
பாரம்பரிய பெருமையும், வளமான எதிர்காலமும் கொண்ட தமிழக காவல்துறையின் தலைமை பொறுப்பை மிக்க பணிவோடு நான் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு இந்த பொறுப்பு அளிக்கப்பட்டதற்காக பெருமை அடைகிறேன். என்மீது நம்பிக்கை வைத்து, இந்த பொறுப்பை எனக்கு அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக காவல்துறையில் பல்வேறு நிலைகளிலும் திறமைமிக்க அதிகாரிகள் பொறுப்பேற்று வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் அரசின் எதிர்பார்ப்பை அவர்கள் நிச்சயமாக நிறைவேற்றி தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பு காவல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டபோதே, தோற்றுவிக்கப்பட்ட அடிப்படை கொள்கைகளாக கீழ்க்கண்டவற்றை தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு, நான் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
- காவல்துறையினரின் அடிப்படை பணி என்பது குற்ற செயல்களை தடுப்பது மற்றும் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதுதான். இதை வைத்துதான் காவல்துறையினரின் செயல்பாடு மதிப்பிடப்படுமே தவிர, காவல்துறை நடவடிக்கைகளின் தோற்றத்தினால் மட்டுமல்ல என்பதை உணரவேண்டும்.
- பொதுமக்களின் ஆதரவை தொடர்ந்து பெறுதல், தேவையற்ற பலபிரயோகத்தை தவிர்த்தல் போன்றவற்றை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்.
- நீதிமன்றத்தின் அதிகாரங்களை கையில் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- விருப்பு, வெறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளுதல், எந்தவித வேற்றுமையும் பாராட்டாமல் பொதுமக்களுக்கு சேவை செய்தல், பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை காப்பாற்ற எந்தவித தியாகத்துக்கும் தயாராக இருத்தல் ஆகியவை காவல்துறையினரின் பிரதான கடமைகளாக இருக்க வேண்டும்.
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் அரசின் முதல் கடமையாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதோடு, அது நமது பொறுப்பை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது என்பதையும் உணர வேண்டும்.
அரசின் இந்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு நம்மால் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழக காவல்துறையின் அனைத்து அதிகாரிகளும், காவலர்களும் தனிப்பட்ட முறையிலும், கடமையாற்றுவதிலும் அப்பழுக்கற்றவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பணியில் பொதுமக்கள், ஊடகங்கள் மற்றும் அனைத்து பிரிவினரும் தக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் ஒரே சமயத்தில் உளவுப் பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகிய இரு முக்கியத் துறைகளுக்கும் டிஜிபியாக ஒருவர் பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும் என்று தெரிகிறது.
விஜயக்குமாருக்காக காத்திருக்கும் சட்டம் ஒழுங்கு?
இருப்பினும் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக விரைவில் விஜயக்குமார் நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவேதான் அந்தப் பொறுப்புக்கு தனியாக யாரையும் அரசு நியமிக்கவில்லை என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications