மகனின் பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாத சோகத்தில் தாய் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கோவை: தனது மகனின் பள்ளிக்கட்டணத்தை செலுத்த முடியாத சோகத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

கூலி வேலை

கோவை பீளமேடு மசக்காளிபாளையத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. இவரும் இவரது கணவர் தர்மராஜும் பஞ்சு குடோனில் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களது மகன் உப்பிலிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூகேஜி முடித்துள்ளார்.

பள்ளிக்கட்டணம்

மகனை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க ரூ.12,000 கட்டணம் செலுத்த வேண்டும். மகனின் கல்விக்காக இருவரும் ரூ.5,000/- வரை சேமித்து வைத்துள்ளனர். ஆனால், மீத தொகைக்கு என்ன செய்வதென்று செய்வதறியாமல் இருவரும் அல்லாடி வந்திருக்கின்றனர்.

தற்கொலை

பள்ளிக்கட்டணத்தைச் செலுத்த கால அவகாசம் குறைவாக இருந்ததால், தம்பதியர் இருவரும் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளனர். இந்நிலையில், புதன்கிழமை இரவு சமையல் அறையில் இருந்த மண்ணென்ணெய்யை உடலில் ஊற்றி சங்கீதா தீ வைத்துக்கொண்டார். அவரைக் காப்பாற்ற போராடிய தர்மராஜூம் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். சங்கீதாவின் மரணம் மசக்காளிபாளையம் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+