கூடுதல் அலைக்கற்றை மீண்டும் ஏலம் விடப்படலாம்! - கபில் சிபல்

குஜராத் மாநிலம் நடியாத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கடந்த ஆண்டு 3 ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் அரசுக்கு ரூ.1.06 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. ஏலம் விடத்தக்க வகையில் கூடுதல் அலைக்கற்றை இருக்குமானால், ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அகண்ட அலைவரிசை வசதி செய்துத்தரப்பட வேண்டும் என அரசு விரும்புகிறது. இதற்காக சாம் பிட்ரோடா, நந்தன் நிலகேணி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது," என்றார்.
3ஜி அலைக்கற்றையில் ஏலம் விடத்தக்க வகையில் கூடுதல் அலைக்கற்றை உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கருதுகிறது. கூடுதல் அலைக்கற்றையை ஏலம் விடும் வழிமுறைகளை ஆராயுமாறு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு மத்திய நிதியமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
விரைவில் லோக் பால் மசோதா...
லோக்பால் மசோதா குறித்து கபில் சிபலிடம் கேட்டபோது, "இப்போதைய குழு விவாதத்துக்குப் பின் ஜூன் 30-க்குள் இறுதி அறிக்கையைத் தயார் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்," என்றார்.
ஐஐடி பேராசிரியர்கள் தரம் குறைந்தவர்களா...
இந்தியாவில் உள்ள ஐஐடி, ஐஐஎம் ஆகிய உயர் கல்வி நிறுவனங்கள் உலகத் தரத்தில் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, "அது அவரது சொந்தக் கருத்து," என்றார் கபில் சிபல்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications