கொழும்பில் இருந்து சென்னைக்கு 1.5 கிலோ தங்க பிஸ்கட்டுகளை விழுங்கி கடத்திய 2 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

ஆலந்தூர்: தங்க பிஸ்கட்டுகளை விழுங்கி அவற்றை கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு கொழும்பில் இருந்து வந்த விமானம் ஒன்றின் பயணிகளை கண்காணிக்குமாறு விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் பெரியசாமி உத்தரவிட்டார்.

அப்போது புதுக்கோட்டை அறந்தாங்கியைச் சேர்ந்த ஆசைதம்பி (வயது 36) மற்றும் சமுத்திரம் (56) என்ற பெண்ணும் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து விசாரித்தபோது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

எனிமா கொடுத்து வெளியில் எடுத்தனர்

இதையடு்த்து அதிகாரிகள் அவர்கள் வைத்திருந்த சூட்கேசை சோதனையிட்டனர். ஆனால் அதில் ஒன்றும் இல்லை. அவர்களின் நடை மட்டும் ஒரு மார்க்கமாக இருந்தது. எனவே அவர்களுக்கு எனிமா கொடுத்தனர்.

அப்போது ஆசைதம்பி வயிற்றில் இருந்து ஆணுறையில் வைக்கப்பட்டிருந்த 950 கிராம் எடையுள்ள 10 தங்க பிஸ்கட்டுகளும், சமுத்திரத்தின் வயிற்றில் இருந்து 540 கிராம் எடையுள்ள 6 தங்க பிஸ்கட்டுகளும் வெளியேறின. ரூ. 35 லட்சம் மதிப்புள்ள சுமார் 1.5 கிலோ தங்கத்தை லாவகமாக வயிற்றில் வைத்து கடத்தி வந்துள்ளனர்.

அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்ததில் தங்க பிஸ்கட்டுகளை சென்னைக்கு கடத்தி வந்தால் ஆளுக்கு ரூ. 5 ஆயிரம் தருவதாக கூறினார்கள். அதனால் தான் அவ்வாறு செய்தோம் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+