விண்ணை நோக்கி விலைவாசி-உணவுப் பணவீக்கம் மீண்டும் கடும் உயர்வு!

Subscribe to Oneindia Tamil

Food inflation
டெல்லி: உணவுப் பணவீக்கம் மீண்டும் ஏறுமுகத்துக்கு திரும்பியுள்ளது. மே 14ம் தேதியுடன் முடிந்த வாரத்துக்கான உணவுப் பணவீக்கம் 8.55 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்தில் அந்த விகிதம் 7.47 ஆக இருந்தது. அதாவது ஒரே வாரத்தில் 1.08 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதற்குக் காரணம், உணவு தானிய வகைகளின் விலையில் ஏற்பட்ட விலை ஏற்றமே. மேலும் வெங்காயம், முட்டை, இறைச்சியின் விலையிலும் உயர்வு காணப்படுகிறது.

பழங்களின் விலை 32.37 சதவீதம் உயர்ந்துள்ளது. அரிசி மற்றும் உருளைக் கிழங்கு விலையிலும் சுமாரான ஏற்றம் காணப்படுகிறது. கடந்த 2010 முதல் இந்த ஆண்டு மார்ச் வரை உணவுப் பணவீக்கம் இரட்டை இலக்கத்திலேயே இருந்தது. இந்த ஆண்டு சற்று குறைய ஆரம்பித்த உணவுப் பணவீக்கம், இப்போது மீண்டும் இரட்டை இலக்கத்தை நோக்கிச் செல்வது கவலையை அதிகரித்துள்ளது.

உணவு சாராத பொருள்களின் விலையில் 23 சதவீத உயர்வு காணப்படுகிறது.

நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. வரும் வாரத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+