தூங்கிக் கொண்டிருந்த கிராமத்தினர் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
மதுரை: திருமங்கலம் அருகே உள்ள கே.சென்னம்பட்டியில் திருவிழாவைப் பார்த்துவிட்டு தெருவோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகேயுள்ள உள்ளது கே. சென்னம்பட்டி.
இங்கு கடந்த இரண்டு நாட்களாக மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வந்தது. விழாவின் இறுதி நாள் இரவில் கோயிலின் எதிரில் உள்ள பள்ளி மைதானத்தில் நாடகம் நடந்தது.
நாடகம் முடிந்த பின்பு ஒரு தரப்பைச் சேர்ந்த 20 பேர் தங்களது தெருவில் உள்ள ஒரு மணல் மேட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் திடீரென பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அந்த குண்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது படவில்லை. மாறாக சாலையில் பயங்கர சத்தத்துடன் விழுந்தது. சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து எழுந்து அந்த இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.
இது குறித்து கள்ளிக்குடி காவல் நிலையத்தில் கள்ளிக்குடி விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றிய செயலாளர் சவுரியப்பன் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மதுரை மாவட்ட எஸ்பி அஸ்ரா கார்க்கும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டார். பெட்ரோல் குண்டு வீசிய மர்ம மனிதர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications