சபாநாயகராக தேர்வானார் ஜெயக்குமார்-ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்த் இருக்கையில் அமர வைத்தனர்

தமிழக சட்டசபையின் சபாநாயகர் பதவிக்கு அதிமுகவின் ஜெயக்குமாரும், துணை சபாநாயகர் பதவிக்கு அதிமுகவின் ப.தனபாலும் மனு செய்திருந்தனர்.
இவர்களை எதிர்த்து யாரும் மனு செய்யவில்லை. இதையடுத்து இருவரும் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இன்று காலை சட்டசபை கூடியதும், எம்.எல்.ஏக்களாக அமைச்சர் என்.ஆர்.சிவபதி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
பின்னர் ஜெயக்குமார் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதை தற்காலிக சபாநாயகர் செ.கு.தமிழரசன் அறிவித்தார்.
இதையடுத்து அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க் கட்சி தலைவர் விஜயகாந்த் ஆகியோர் ஜெயக்குமாரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் துணை சபாநாயகராக ப.தனபால் தேர்வு செய்யப்பட்டதாக சபாநாயகர் ஜெயக்குமார் அறிவித்தார்.
இதையடுத்து இருவரையும் பாராட்டி முதல்வர் ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் பேசினர்.
ஜெயலலிதாவுக்கு ஜெயக்குமார் நன்றி
முன்னதாக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஜெயக்குமார் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சட்டசபையின் மாண்பு, மரபை சீர்குலைக்காமல் கண்ணியத்துடன் செயல்படுவேன். கட்சி பாகுபாடின்றி செயல்பட்டு அனைவரது பாராட்டுக்களையும் பெறுவேன்.
சட்டசபையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசுவதற்கு உரிய வாய்ப்பளிப்பேன் என்றார்.
ஜெயலலிதா பேச்சு
முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு உரிய மதிப்பளிக்கும் வகையில் ஆளுங்கட்சி செயல்படும். ஜனநாயகம் தழைக்க துணையாக இருப்போம்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு பேரவையின் மரபுகளைக் காப்பாற்றும் வகையில் சபாநாயகர் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications